•                                                 உகரத்தில் வெளியாகும் எழுத்தாக்கங்களுக்கு அவ்வவற்றின் ஆசிரியர்களே பொறுப்பாளிகளாவர்..!

Tuesday, November 3, 2015

பொழுதுபடுதல்..


காங்கேசன்துறைக் கனவுகளுடன்
மீண்டும் மீண்டும்
தலைநகரக் கதவுகளைத் தட்டும்
குளிர்பதனத் தொடர்வண்டியுள்
வெக்கை எறிந்தது,
எது?
கட... கட... கட... கட... 

கிளிநொச்சியில்,
கொடுங்கோலென நிற்கிற
நினைவுச் சின்னத்தில்தான்
உதிக்கத் தொடங்கியது
சூரியன்.
கட... கட... கட... கட... 

புதிதாக முளைத்துக் கிளை பரப்புகிற
சித்தார்த்தரின் அரசைக் 
கடக்கையில், கொளுத்துகிறது
நண்பகல் வேளை.
கட... கட... கட... கட... 

கடைசி இருக்கைகளில்
நெடுநேரமாய்க் கூடுகட்டும்
சிங்களக் குயில்களின்
சங்கீத சாகரத்தில்
மெல்ல மெல்ல அஸ்தமிக்கிறது
வெக்கை.
☗☗☗☗☗☗☗☗☗☗

Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...