Monday, February 20, 2017

வருணாச்சிரமம் தர்மமா? அதர்மமா? | பாகம் 5 | கம்பவாரிதி இ. ஜெயராஜ்

✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦
முன்னைய பாகங்களைப் படிக்க ➧➧➧
✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦
ங்களில் சிலருக்குக் கோபம் அதிகரிப்பதை,
கட்டுரை பற்றி வரும் கருத்துப்பதிவுகள் தெளிவாய் எடுத்துக் காட்டுகின்றன.
வர்ணாச்சிரம தர்மத்தையும் அந்தணர்களையும் அவர்களின் ஜாதிச் செருக்கையும்,
சிலர் வாங்குவாங்கென்று வாங்கித் தள்ளியிருக்கிறார்கள்.
அதைப்பற்றி எழுதும், என்மீதான ஏவுகணைகளுக்கும் குறைவில்லை.
மரியாதையாகவும் மரியாதையின்றியும் வந்த அவ் அபிப்பிராயங்களை,
உகரத்தில் இணைத்துக் கொள்ளும்படி ஆசிரியரிடம் கேட்டிருக்கிறேன்.
ஒரு விடயம்.
என்னைத் திட்டுவதுபற்றி எனக்கு எந்தக் கவலையுமில்லை.
ஒவ்வொருவரின் உயர்வும் தாழ்வும் அவரவரால் மட்டுமே நிகழ்வன எனும் கருத்தில்,
அசையாத நம்பிக்கையுள்ளவன் நான்.
பெருமைக்கும் ஏனைச்சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக்கல்
என்கிறார் திருவள்ளுவர்.
என்னுடைய கவலையெல்லாம் என்னை இழிவுபடுத்துவதாய் நினைந்து,
எழுதப்படும் தரமற்ற வார்த்தைப் பிரயோகங்களால்,
உங்களை நீங்கள் இழிவுபடுத்துகிறீர்களே என்பது பற்றித்தான்!
என்னைத் தாழ்த்துவதற்காக உங்களைத் தாழ்த்திக் கொள்ளாதீர்கள்.

♦  ♦

பலரும் அந்தணர்களின் ஜாதிவெறியால் அதிகம் பாதிப்புற்றிருப்பது தெரிகிறது.
அங்ஙனம் ஏதோ வகையில் பாதிக்கப்பட்டவர்கள்,
நான் ஏதோ அந்தணர்களைக் காக்க முயல்வதாய் எண்ணி என்மீதும் பாய்கிறார்கள்.
முன்பு சொன்ன ஒன்றையே  மீண்டும் சொல்ல விரும்புகிறேன்.
அந்தணர்களைப் பாதுகாப்பதோ உயர்த்துவதோ இக்கட்டுரைத் தொடரின் நோக்கமல்ல.
குறித்த ஒரு தத்துவத்தைப் பின்பற்றியவர்கள் பிழை செய்தார்கள் என்பதற்காக,
அத்தத்துவத்தையே நிராகரிக்கவேண்டுமென்றால்,
உலகத்தில் ஒரு தத்துவமும் மிஞ்சப்போவதில்லை.
வர்ணாச்சிரம தர்ம தத்துவத்தின் நியாயம் உரைப்பதே,
எனது இக்கட்டுரையின் நோக்கம் என்று அறிக.

♦  ♦

வந்த கருத்துக்களில் முக்கியமான கேள்விகள் இரண்டு இருந்தன.
ஒன்று பியோன் மனேஜராகலாம். சூத்திரன் பிராமணனாகலாமா? என்பது.
அதற்கான பதிலை இக்கட்டுரைத் தொடர் பின்னர் உரைக்கும்.
அடுத்தது மற்ற ஜாதியினரை அங்கீகரிக்காத அந்தணஜாதியின் திமிர் பற்றியது.
அக்கேள்வியின் நியாயத்தையும் நிஜத்தையும் யாரும் மறுதலிக்க முடியாதென்பது நிச்சயம்.
ஆனால் இதைப்பற்றி கொந்தளிப்பவர்களிடம் ஒரு கேள்வியைக் கேட்கவேண்டியே இருக்கிறது.
தனக்குக் கீழ்பட்ட ஜாதியினரை அங்கீகரிக்காத வக்கிரம்,
அந்தணஜாதியிடம் மட்டும் தானா இருக்கிறது?
அந்தணர்களைக் குறை சொல்லும் மற்றைய ஜாதியினர்,
தமக்குக் கீழுள்ள வேறு ஜாதியினரை அங்கீகரித்து அணைத்து வாழ்கிறார்களா?
கொந்தளித்து எழுதுகிறவர்கள் உண்மைக்கு மாறில்லாமல் தம் நெஞ்சில் கைவைத்து,
 ‘ஆம்’ என்ற பதிலை உறுதியாய்ச் சொல்லிவிடுவார்களேயானால்,
இக்கட்டுரைத் தொடரை இந்த அளவோடு நிறுத்திவிடுகிறேன்.

♦  ♦

ஒரு பியோன் மனேஜராய் வரலாம் என்பது நிஜமே.
ஆனால் இன்றைய வளர்ச்சி நிலையிலும் எந்த மனேஜரும்,
ஒரு பியோன் தனக்குச் சமமாய் வளர்வதை,
அடிமனதில் ரசிப்பதில்லை எனும் உண்மையையும்,
நாம் உணர்ந்தேயாகவேண்டும்.
வலியது மெலியதை விழுங்குதல் உலகியற்கை.
அரசியல், அதிகாரம், ஜாதி, சமயம் என எல்லாவற்றிலும்,
வலியது மெலியதை விழுங்கிக் கொண்டேதான் இருக்கிறது.
அதை மாற்ற வழியில்லையா? என்று கேட்பீர்கள்.
ஒரே ஒரு வழி இருக்கிறது.
மெலியது தன்னை வலியதாய் ஆக்கிக்கொள்வதே அவ்வழி!
அங்ஙனம் ஆக்கிக்கொண்டாலும் ஒரு பிரச்சினை இருக்கிறது.
வலியதாய் ஆனது தன் வலிமையைத் தொடர்ந்தும் நிலைநிறுத்த,
மெலியதை விழுங்குதல் தவிர்க்கமுடியாத ஒன்றேயாம்.
சரி நாங்கள் விடயத்தைத் தொடர்வோம்.

♦  ♦

அறம் உரைப்பதற்காக,
பலர் கூடிவாழும் ஒரு சமூகத்தையும்,
அச்சமூகத்தில் வாழும் ஒரு மனிதனின் தனிவாழ்வையும்  கூறுபடுத்தி,
சமூகத்தின் நலம் நோக்கி நம் மேலோர் வகுத்த வகுப்பே வர்ணாச்சிரமதர்மம் என்றும்,
அவர்களால் வகுக்கப்பட்ட சமூகப்பிரிவுகள் வர்ணங்கள் எனப்பட்டன என்றும்,
தனிமனிதவாழ்வுப் பிரிவுகள் ஆச்சிரமங்கள் எனப்பட்டன என்றும்,
அப்பிரிவுகளை அடிப்படையாய்க் கொண்டு சொல்லப்பட்ட தர்மமே,
வர்ணாச்சிரமதர்மம் என்றும் போன அத்தியாயத்தில் சொல்லியிருந்தேன்.
அந்த இடத்திலிருந்து தொடருவோம்.

♦  ♦

முதலில் ‘ஆச்சிரமம்’ என்று சொல்லப்படும்,
தனிமனித வாழ்வுப்பிரிவுகள் எங்ஙனம் பிரிக்கப்பட்டன என்று,
சற்று விரிவாய்ச் சொல்கிறேன்.
அதனைப் பொறுமை காத்து நீங்கள் கேட்கவேண்டும்.
தனிமனித வாழ்வுக்காலத்தை ஊன்றி அவதானித்த நம்மேலோர்,
அவ்வாழ்வின் பகுதிகளாய் நான்கு பெரும்பிரிவுகள் அடங்கியிருப்பதை இனங்கண்டனர்.
அவற்றையே தனிமனிதவாழ்வின் கூறுகளாய் அவர்கள் வகுத்துரைத்தனர்.

♦  ♦

அவர்கள் கவனிப்பில்,
ஒரு மனிதனின் ஆரம்பவாழ்வுக் காலம் கற்கும் காலமாய் அமைந்திருந்தது.
ஏதோ ஒரு விடயத்தைத் அறிந்துகொண்டு அவ்விடயத்தில் ஆட்சிபெற்று,
அதனால் வாழ்வியல் உபாயமொன்றைத் தேடிக்கொள்ள மனிதன் முயன்றான்.
அம் முயற்சிக்காலமே கற்கும்காலம் என உரைக்கப்பட்டது.
அந்த கற்கும் பருவத்தையே,
பிரம்மச்சரியம் அல்லது மாணவப் பருவம் எனப் பெயரிட்டு,
தனிமனித வாழ்வின் முதற்கூறாய் உரைத்தனர் உயர்ந்தோர்.

♦  ♦

பிரம்மச்சரியப் பருவத்தில் பெற்றுக்கொண்ட கல்வியால்,
தன்னைத்தான் காத்துவாழும் தகுதிபெற்ற ஒருவன்,
அந்நிலையில், தனக்கான சமூகப் பிரதிநிதித்துவத்தை,
விரும்பி, வேண்டி நிற்கத் தலைப்பட்டான்.
அதற்கு முன் அப்பிரதிநிதித்துவம் அவனுக்கு இல்லையா? என்று கேட்பீர்கள்.
இல்லை! என்பதே பதிலாம்.
கற்கும் பருவத்தில் மற்றவர்களில் தங்கி இயங்கவேண்டி இருந்ததாலும்,
இளமையால் அறிவு முதிர்ச்சி பெறாதிருந்ததாலுமே,
அன்று கற்கும் பருவத்தினர்க்கு சமூகப்பிரதிநிதித்துவம் வழங்கப்படாமல் இருந்தது.
அன்று என்ன? இன்றும் அதுவேதான் நடக்கிறது.
இளமைப்பருவம் முடியும் நிலையில்த்தான்,
ஒருவருக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்படுவதிலிருந்தே,
மாணவப்பருவத்தின் பின்னர்தான் சமூகப்பிரதிநிதித்துவம்,
இன்றும் வழங்கப்படுவதை நாம் அறிந்து கொள்ளலாம்.

♦  ♦

முதற்சொன்ன கற்கும் காலத்தில் ஒருவனின் பாலப்பருவம் நீங்கிப்போக,
சமூகப்பிரதிநிதித்துவம் பெறவேண்டி நிற்கும் இப்பருவத்தில்,
அவனது வாழ்வு இளமையைத் தொடுகிறது.
அவ் இளமை தந்த இயல்பான காமவிருப்பும்,
சமூகவாழ்வுக்கான துணையின் அவசியமும் ஒருங்குசேர,
இயற்கையேயான மனஈர்ப்பால் அவன் எதிர்ப்பாலிற் துணைதேடி,
தனது சமூகவாழ்க்கையை ஆரம்பிக்கிறான்.
அங்ஙனம் துணையோடு இணைந்து அவன் தொடங்கும் சமூகவாழ்வு,
கிருகஸ்தம் அல்லது இல்லறம் எனும் பெயரால்,
தனிமனிதவாழ்வின் இரண்டாம் நிலையாய் உரைக்கப்பட்டது.

♦  ♦

இல்லறவாழ்வின் பயனாய்,
புதல்வர்களையும், சமூக அனுபவங்களையும் பெற்றுக்கொண்ட ஒருவன்,
முதுமையைத் தொடும் தன்வாழ்வின் அடுத்த பருவத்தை எய்துகிறான்.
முதுமை தரும் உடற்சோர்வும்,
சமூகச்செயற்பாட்டின் தொடர் நடவடிக்கைகளால் ஏற்பட்ட களைப்பும்,
பிரம்மச்சரியப் பருவம் கடந்த தனது புதல்வர்களின் சமூகவாழ்வில் பங்கேற்கும் விருப்பும்,
இவ்வயதில் அவனுக்கு ஒருங்கே நிகழ,
தம் புதல்வர்களை இல்வாழ்வுக்காக்கி,
சமூகப் பொறுப்புக்களையும் இல்லப்பொறுப்புக்களையும் அவர்களிடம் ஒப்படைத்து,
இல்லில் இருந்தபடியே தன் வாழ்க்கைத்துணையோடு,
உலகியலிலிருந்து ஒதுங்கி ஓய்வுபெற்று வாழத்தலைப்படுகிறான் அவன்.
தனிமனிதவாழ்வின் இம்மூன்றாம் நிலையே,
வானப்பிரஸ்தம் என உயர்ந்தோரால் வகுத்துரைக்கப்பட்டது.

♦  ♦

மேற்சொன்ன இம்மூன்று பிரிவுகளிலும்,
பெரும்பான்மையானோரின் தனிவாழ்வு அடங்கிப்போக,
விதிவிலக்காய் ஒரு சிலர்
வானப்பிரஸ்தம் எனும் ஓய்வுநிலையிலிருந்து சற்று மேலேறி,
முற்றாய்த் தனிமனிதவாழ்வு, சமூகவாழ்வு என்பவற்றை ஒதுக்கி,
ஆன்மா என்ற ஒன்றைத் தம்முள் இனங்கண்டு,
அதன் வளர்ச்சியாய் இறை என்ற ஒரு சக்தியை உணர்ந்து,
அவ் இறைநிலை எய்துதலே பேரின்பம் என்றறிந்து,
அவ் இறைநிலை எய்துதற்கு,
இவ்வுலகியலை முற்றாய்த் துறக்கத் தலைப்பட்டனர்.
அங்ஙனம் உலகியலைத் துறந்து நின்ற அவர்கள்,
சமூக எண்ணிக்கையில் சிறு பகுதியினராய் இருந்த போதும்,
மேற்கூறிய தனிமனிதவாழ்வின் மூன்று நிலையையும்,
அவர்கள் வாழ்வுநிலை கடந்திருந்ததால்,
தனிமனிதவாழ்வின் ஓர் தனித்த நிலையாய்,
அவர்தம் வாழ்வுநிலையை ஏற்கவேண்டிய அவசியம் ஏற்பட்டது.
அங்ஙனம் இனங்காணப்பட்ட முற்றும் துறந்துநின்ற அத்தனிமனித வாழ்வுநிலையையே,
சந்நியாசம் அல்லது துறவு  என்ற பெயரால் உரைத்து,
தனிமனிதவாழ்வின் நான்காம் பிரிவாய் ஏற்றனர் நம் பெரியோர்.

♦  ♦

பிரம்மச்சரியம், கிருகஸ்தம், வானப்பிரஸ்தம், சந்நியாசம் என்ற,
இந்த நான்கு பிரிவுகளினுள் ஒரு தனிமனிதனின் வாழ்வு ஒட்டுமொத்தமாய் அடங்கிப்போக,
இந்நான்கு பிரிவுகளையும் தனிமனித வாழ்வின் அடிப்படைப் பிரிவுகளாக்கி,
அப்பிரிவுகளுக்கு ஆச்சிரமம் எனப் பெயரிட்டனர் நம் ஆன்றோர்.
இதுவே ஆச்சிரமப்பிரிவு அமைந்த அடிப்படையாம்.

♦  ♦

என்ன? கோபம் கொப்பளித்த உங்கள் விழிகளில்,
சிறிய சாந்த ஒளி தெரியுமாப்போல் தோன்றுகிறதே!
முதல்முதலாய் ஆச்சிரமப் பிரிவுகளின் அடிப்படையைத் தெரிந்துகொண்ட திருப்தியாக்கும்.
உண்மைதான். ஆழ்ந்தவிஷயங்கள் அறிவுள் ஏறும்போது விழியில் ஒளி வரத்தான் செய்யும்.
இதுவரை சொந்தப் பாதிப்புக்களை மட்டும் வைத்து வர்ணாச்சிரம தர்மத்தை வெறுத்த உங்களுக்கு,
உண்மை ஆச்சிரமதர்ம விளக்கத்தால் சுகானுபவம் ஏற்படுகிறது போல.
சந்தோஷம்! இன்னும் கொஞ்சம் கேட்பீர்கள்போல் தெரிகிறது.
வேண்டுமானால் ஒரு தேநீர் குடித்துவிட்டு வாருங்கள் தொடரலாம்!

♦  ♦

என்ன? தேநீர் கோப்பையோடு இங்கேயே வந்துவிட்டீர்கள்.
இதுதான் ஐயா உண்மையின் ஆற்றல்.
உங்களுக்கும் உண்மையில் ருசி ஏற்பட்டத் தொடங்கிவிட்டது.
மெத்தச் சந்தோஷம். இனி என் வேலை சுலபமாகிவிடும்.
வாருங்கள் விஷயத்தைத் தொடர்வோம்.

♦  ♦

இதுவரை தனிமனித வாழ்வின் நான்கு பிரிவுகள் பற்றி விளக்கினேன்.
இனி சமூகவாழ்வின் நான்கு பிரிவுகளையும்,
நம் பெரியோர் எங்ஙனம் வகுத்தனர் என்பது பற்றிச் சொல்கிறேன்.

♦  ♦

சமூகமாகக் கூடிவாழத் தலைப்பட்ட மனிதர்கள்,
வாழ்வின் தேவைகளை நிறைவேற்றும் தேடலில் இறங்கினார்கள்.
அத்தேடலின் முதற்படியாய்  உற்பத்தி அமைந்தது.
ஜீவாதாரவாழ்வு நிலைத்தற்குத் தேவையான அடிப்படைப்பொருட்கள் அனைத்தும்,
சமூகத்தின் ஒருகுழுவினரால் உற்பத்தி செய்யப்பட்டன.
இயல்பாய் அவ்வுற்பத்தி செய்யும் வல்லமையும் விருப்பும் உள்ளவர்கள் அப்பணியைத் தமதாக்கினர்.
அக்குழுவினரின் முயற்சியால்,
சமூகத்திற்குத் தேவையான ஆதாரப்பொருட்கள் அனைத்தும் உற்பத்தி செய்யப்பட்டன.
அங்ஙனம் உற்பத்தியைத் தொழிலாய்க் கொண்டவரை,
சமூகப்பிரிவின் முதல் நிலையினராய்க் கொண்டு,
சூத்திரர் என்ற சமூகத்தின் முதற்பிரிவு வகுக்கப்பட்டது.

♦  ♦

தமக்கு வாய்த்த இயல்பான முயற்சியால் சிலர் பலவான பொருட்களை உற்பத்தி செய்த போதும்,
சமூகவாழ்வு தன்னிறைவு அடையவில்லை.
உற்பத்தியாளர்களால் தனித்தனி உருவாக்கப்பட்ட உற்பத்திப் பொருட்களை,
பலரிடமும் சேர்ப்பித்தலின் அவசியம் அப்போது உணரப்பட்டது.
அவ் உணர்ச்சியால்,
உற்பத்திப்பொருள்களை சமூகத்தில் வாழும் அனைவர்க்குமாய் பகிர்ந்தளிக்க,
அப்பகிர்ந்தளித்தலில் இயல்பாற்றல் பொருந்திய ஒருகுழுவினர் முன்வந்தனர்.
உற்பத்தித் திறனுக்கேற்ப விலை நிர்ணயித்து, கொள்வனவு செய்து,
தம் முயற்சிக்கான பலனையும் பெற்று,
பலரும் பலதையும் பெற்றுக்கொள்ளும் வகையில்,
உற்பத்திப் பொருட்களைப் பகிர்ந்து கொடுக்கும் பொறுப்பை அக்குழுவினர் ஏற்றுக்கொண்டனர்.
உற்பத்திப் பொருட்களைப் பகிர்ந்தளிக்கும் பொறுப்பை ஏற்று இயற்ற முன்வந்த,
அவ்விரண்டாம் குழுவினரை உயர்ந்தோர் வைசிகர் அல்லது வணிகர் என்றுரைத்து,
சமூகத்தின் இரண்டாம் பிரிவினராய் அவர்களை அங்கீகரித்தனர்.

♦  ♦

என்ன? தேநீர் அருந்தாமலே கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள்.
அது ஆறிவிடப்போகிறது.
சொன்ன பின்பும் குடிப்பதாய்த் தெரியவில்லையே!
அதுதான் ஐயா அறிவின் ஆற்றல்.
இதைத்தான் நம் வள்ளுவப்பாட்டன்,
செவிக்கு உணவு இல்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும் என்றான்.
அக்கூற்றின் உண்மை இப்பொழுது தெரிகிறதா?
ஆனாலும் தேநீர ஆறுவதற்குமுன்னர் அதனில் ஒரு வாயேனும் குடித்துக் கொள்ளுங்கள்.

♦  ♦

சூத்திரர், வைசிகர் என்ற,
சமூகத்தின் இருபிரிவினரைப் பற்றிச் சொன்னேன்.
இனி மூன்றாம் நிலையாளர்களைப் பற்றிப் பார்க்கலாம்.
உற்பத்தி செய்யப்பட்டு,
உற்பத்தி செய்யப்பட்ட பொருள்கள் பங்கீடு செய்யப்பட்ட நிலையிலும்,
சமூகவாழ்வு பூரணப்படவில்லை.
மனிதர்களின் கூட்டுவாழ்க்கையில் அப்போது ஒரு புதிய பிரச்சினை உருவாகியது.
வலியவர், மெலியவர் என அனைவரும் ஒன்றுசேர்ந்த சமூகத்தில்,
வலியவன், மெலியவனை விழுங்க முற்பட்டான்.
அவ்வலிவும், மெலிவும் உடலளவிலும், செயலளவிலும்,
சமூகத்துள் விரவிக் கிடந்தன.
என்ன புரியவில்லையா?
அதுபற்றி இன்னும் சற்று விளக்கமாய்ச் சொல்லுகிறேன்.

♦  ♦

உடலளவில் வலிமை பெற்றிருந்தவன் முயற்சியேதும் செய்யாமலிருந்து கொண்டு,
தனது உடல் வலிமையால் மெலியவர்களை நசுக்கி தான் வசதியாய் வாழத் தலைப்பட்டான்.
இது உடலளவில் ஏற்பட்ட வலிமை, மெலிமை வேறுபாடு.

♦  ♦

உடலால் வலிமை பெற்றிருந்தவர்கள் போலவே,
உற்பத்தியாளர்களிலும், விநியோகஸ்தர்களிலும்,
தொழிலால் வலிமை பெற்றவர்களும் இருந்தார்கள்.
அத்தொழில் வலிமை கொண்டவர்களும்,
தம்மில் தாழ்ந்தோரை விழுங்கவே முற்பட்டனர்.
விளக்கத்திற்காய் அவ்விடயத்தை இன்னும் சற்று விரிவாய்ச்சொல்கிறேன்.

♦  ♦

உப்பு உற்பத்தியாளன், நெல் உற்பத்தியாளன் எனும் இருவரில்,
நெல் உற்பத்தியாளன் காலத்தாலும், முயற்சியாலும்  அதிகம் பாடுபட்டு,
நெல்லை உற்பத்தி செய்தான்.
உப்பு உற்பத்தியாளன்,
காலத்தாலும், முயற்சியாலும் முன்னையவனை விட சிறிய அளவே பாடுபட்டு,
கடல்நீரைத் தேக்கிய அளவில் உப்பை உற்பத்தி செய்தான்.
உப்பு அனைவர்க்கும் தேவையான ஒரு பொருள்.
குறைந்த முயற்சியோடு உருவாக்கப்பட்ட அப்பொருளை,
தன் உற்பத்திப்பொருளின் ‘தேவை’ எனும் வலிமை நோக்கி,
நெல்லின் விலையை விட அதிகம் உரைத்தான் அவன்.
இந்நிலையையே தொழிலால் வலிமையுற்றநிலை என்றேன்.
சமநிலையற்ற இத்தொழில் வலிமை வேறுபாடு,
உற்பத்தியில் மட்டுமன்றி விநியோகத்திலும் நிகழ்ந்தது.

♦  ♦

வலியவன் மெலியவனை விழுங்க முற்பட்ட இந்நிலையால்,
சமூக சமநிலை குலையமுற்பட  அதனைச் சீர்செய்தற்காய்,
ஒட்டுமொத்தச் சமூகத்தையும் பொறுப்பேற்றுக் கட்டுப்படுத்தி நெறிசெய்ய,
சுய ஆற்றல் மிக்க ஓர் நிர்வாகி தேவைப்பட்டான்.
அந்நிர்வாகி ஒட்டுமொத்தச் சமூகத்தையும் நிர்வகித்ததால்,
அவனே அச்சமூகத்தின் தலைவனாய்க் கருதப்பட்டான்.
சமூகத்தின் உள்ளே நிகழ்ந்த பிரச்சினைகளையும்,
வெளியிலிருந்து சமூகத்திற்கு வருவதான பிரச்சினைகளையும் நீக்கி,
சமூகத்தைக் கட்டிக்காத்து சமநிலைப்படுத்தும் பொறுப்பு,
அந்நிர்வாகியிடம் விடப்பட்டது.
வலியவர்களால் சமூகம் விழுங்கப்படாமலிருக்க,
தனக்கு ஆறு அங்கங்களை உருவாக்கி தன்னைப் பலப்படுத்தி,
ஒட்டு மொத்த சமூகத்தையும் தன் காவலுக்குள்  உட்படுத்தி நின்றான் அந்நிர்வாகி.
தம்மைக் காக்கவென அந்நிர்வாகி செய்த முயற்சிகளுக்காய்,
சமூகத்தின் அனைத்துப பகுதியினரும் ‘வரி’ என்ற பெயரில்,
தம் வருமானத்தின் ஒரு பகுதியை அவனுக்கு ஈந்து துணை செய்ய முன்வந்தனர்.
உற்பத்தி, விநியோகம் என்ற இருநிலைகளையும் தாண்டி,
சமூக அமைப்புக்கு அவசியமாய் அமைந்த இந் நிர்வாகத்தை,
தம் இயல்பாற்றலாலும் விருப்பாலும் சமூகத்தின் ஒரு குழுவினர் செய்யத் தலைப்பட்டனர்.
இங்ஙனம் நிர்வாகத்தை இயற்ற முன்வந்தோரை,
சமூகத்தின் மூன்றாம் நிலையாளராய்க் கொண்டு,
சத்திரியர் அல்லது அரசர் எனும் சமூகத்தின் அடுத்த நிலை வகுக்கப்பட்டது.

♦  ♦

உற்பத்தி, விநியோகம், நிர்வாகம் என்ற,
மூன்றுநிலைகளில் சமூக அமைப்பு ஓரளவு பூரணப்பட்டாலும்,
அதன் முழுமைக்கு மற்றொரு சமூகக்கூறும் வேண்டப்பட்டது.
உற்பத்தி, விநியோகம், நிர்வாகம்  என்ற விடயங்களைப் பொறுப்பேற்றோர்,
கால வளர்ச்சிக்கேற்ப தத்தம் துறைகளைப் புதுப்பிக்கும் அவசியம் உணர்ந்தனர்.
தாம்தாம் பொறுப்பேற்ற விடயங்களில் அவர்கள் மூழ்கவேண்டியிருந்ததால்,
தத்தம் துறைகளை வளர்த்தெடுக்கத் தேவையான கல்வியறிவினைப் பெறும் வாய்ப்பை,
அவர்கள் இழந்து நின்றனர்.
இந்நிலையில் இயல்பாகவே கற்கும் ஆற்றல்  நிறைந்த ஒரு குழுவினர்,
ஆழ்ந்து கற்று மற்றையோர் துறைகளை வளர்ச்சிப் பாதையில் செலுத்தத் தாமாக முன்வந்தனர்.
அங்ஙனம் உற்பத்தியாளன், விநியோகஸ்தன், நிர்வாகி எனும்,
மேற்சொன்ன மூன்று சமூக நிலையினரையும் உயர்விக்க முன்வந்த கல்வியாளன்,
அனைவர்க்கும் துணை புரிந்து நின்றதால் சமூகத்தில் முக்கியப்படுத்தப்பட்டான்.
தம் வளர்ச்சிக்காகப் பாடுபட்ட அவனுக்கு,
மற்றை மூன்று வர்ணத்தாரும் தானம் என்ற பெயரில் நன்கொடைகளை வழங்கி,
அறிவுத்தேடலையே தம் வாழ்வின் முழுநேர வேலையாக்கி அவன் இயங்க வழி சமைத்தனர்.
அறிவுத்தேடலையே தம் வாழ்வாக்கி,
ஒட்டுமொத்தச் சமூகத்தின் உயர்வுநோக்கிச் செயற்படத் தொடங்கிய அக்குழுவினரை,
சமூகத்தின் நான்காம் நிலையினராக்கி,
அந்தணர் அல்லது பிராமணர் என வகுத்துரைத்தனர் நம் ஆன்றோர்.

♦  ♦

உற்பத்தி, விநியோகம், நிர்வாகம், கல்வி என்னும் நாற்கூறில்,
ஒட்டுமொத்த சமூகஅமைப்பும் உள்ளடங்குதலைக் கொண்டே,
சூத்திரன், வைசிகன், சத்திரியன், பிராமணன் எனும்,
இந்நான்கு வர்ணங்களும் வகுக்கப்பட்டன.
இதுவே வர்ணஅமைப்பு தோன்றியதன் அடிப்படையாம்.

♦  ♦

சென்றமுறை கருத்து எழுதிய ஓர் அன்பர்,
ஆச்சிரமதர்மம் இயற்கை என்றும்,
வர்ணதர்மம் செயற்கை என்றும் எழுதியிருந்தார்.
வயது மாற்றத்தால் இயற்கையாக வரும் வாழ்வு மாற்றப் பிரிவுகளே,
ஆச்சிரமங்கள் என்பதால் அதனை இயற்கை என்றும்,
உற்பத்தி, விநியோகம், நிர்வாகம், கல்வி என்பவற்றை,
அடிப்படையாகக் கொண்ட வர்ணப்பிரிவுகளை நாமாக வகுத்துக் கொள்வதால்,
அதனை செயற்கை என்றும் கருதி,
அங்ஙனம் அவ் அன்பர் எழுதினார் போலும்.
ஆனால் எப்படி ஆச்சிரமப்பிரிவுகள் இயல்பாய் அமைந்தனவோ,
அதே போலத்தான் வர்ணப்பிரிவுகளும் அவரவர் ஆற்றலுக்கேற்ப இயல்பாய் அமைகின்றன.
உற்பத்தித்திறனோ, விநியோகத்திறனோ, நிர்வாகத்திறனோ, அறிவுத்திறனோ,
பிறக்கும் போதே ஒருவனுக்கு இயல்பாக அமைந்து விடுகிறது.
சமுதாயத்தைச் சற்றுக் கூர்ந்து கவனிப்பீர்களோயானால்,
இவ் உண்மையை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
அதனால் வர்ணப்பிரிவும் இயற்கையின் விளைவே என நாம் அறிதல் வேண்டும்.

♦  ♦

பிறக்கும் ஜாதியால் அன்றி வாய்க்கும் இயல்பாற்றலினாலேயே ஒருவர்,
எந்த வர்ணத்திற்குரியவர் என இனங்காணப்படுகிறார்.
இசைவேளாளர் மரபில் வந்த கலைஞர் கருணாநிதி அவர்களும்,
அந்தணர் மரபில் வந்த ராஜாஜி அவர்களும்,
வணிகர் மரபில் வந்த முன்னைய நிதியமைச்சர் பா.சிதம்பரம் அவர்களும்,
பிறந்த குலத்தால் கணிக்கப்படாமல் அவர்தம் இயல்பாற்றலால் கணிக்கப்பட்டு,
சத்திரிய நிலை எய்தி தலைவர்களாய் நின்றமை இதற்காம் சான்றாம்.

♦  ♦

என்ன? ரொம்பத்தான் களைத்துப்போய்விட்டீர்கள் போல,
ஆறினாலும் பரவாயில்லை கொஞ்சம் தேநீரைக் குடித்துக் கொள்ளுங்கள்.
வேண்டுமானால் ஒருதரம் முகத்தைக்கூட கழுவிவிட்டுக் கூடவரலாம்.
முறைசார் வழியில் மேலோட்டக்கல்வியை இதுவரை பயின்று வந்த உங்களுக்கு,
புத்திக்களைப்பு என்றால் என்ன என்று தெரிந்திருக்காது.
இப்போது அதை உணர்வீர்கள் என நினைக்கிறேன்.
இன்னும் அதிகம் உங்களைச் சிரமப்படுத்துவது நியாயமல்ல.
வர்ணம் என்றால் என்ன?
ஆச்சிரமம் என்றால் என்ன? என்று,
இப்போது உங்களுக்கு ஓரளவு விளங்கியிருக்கும்.
என்ன? உங்களில் சிலருக்கு இன்னும் முகத்தில் தெளிவைக்காணோம்.
இதுவும் புரியவில்லையா?
விளங்காத வார்த்தைகளில் விளங்காத விஷயத்தை விளங்காத விதத்தில்,
விளங்காத புதுமையாளர்கள் விளக்கினால் மட்டும்,
விளங்காமலே விளங்கியவர்கள்போல்,
தலையாட்டிப் பழகிய உங்களுக்கு இது மட்டும் விளங்கவில்லையாக்கும்.
இதுவும் விளங்காதபட்சத்தில்,
உங்களுக்கு இக்கட்டுரையை வாசிப்பதற்கான முன்னறிவு இல்லையென்றுதான் அர்த்தம்.
அப்படிப்பட்டவர்கள் இக்கட்டுரை வாசிப்பை இந்த அளவோடு விட்டுவிடலாம்.

♦  ♦

வருணாச்சிரமம் என்றால் என்னவென்று சொல்லிவிட்டேன்.
அதனோடு தர்மம் என்ற சொல் இணைக்கப்பட்ட காரணத்தை இனிச்சொல்கிறேன்.
நீங்கள் பயப்படாதீர்கள்! இப்போது இதற்குமேல் உங்களைக் கஷ்டப்படுத்த,
நான் ஒன்றும் மனச்சாட்சி இல்லாதவன் இல்லை.
அந்த விடயத்தை அடுத்த வாரம் பார்க்கலாம்.
வெள்ளிதோறும் தர்மம் - தொடரும்


-வாசகர் விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன-
Like
Comment
Comments
Éèśwàr Arul அப்படியென்றால் உற்பத்தி செய்யும் சூத்திரன் உரிய பக்குவம் பெற்று பிராமணன் ஆகிக் கோயில் கருவறையுள் நுழையலாம் என்கின்றீர்கள்!!!
அடிப்படையான ஒரு இனத்திலிருந்து நான்கு வர்ணமும் உருவாக்கப்பட்டு பிராமணன் தானே தலையில் நின்றான் என்கிறீர்கள்!!!
LikeReplyMessage518 February at 10:56
Piratheepan Naguleswaran நீர் எதையும் புதிதாக கூறிவிடவில்லை ,முழுப்பூசணிகாயை சோற்றில் மறைக்க முற்படுகிற இந்துத்துவ வாதிகளின் அதே புரட்டை தான் மீண்டும் மீண்டும் வாந்தி எடுக்கிறீர் .என்ன செய்வது விழுங்கியதை தானே ஒருவனால் வாந்தியெடுக்க முடியும்.
பிறப்பின் அல்லது குலத்தின் அ
...See more
Shobisan Senthilnathan கட்டுரையை வாசிக்கும் அறிவு வேண்டும். அது உமக்கு போதாது...
Piratheepan Naguleswaran ஐயா அறிவு மிகுந்தவரே
உமக்கு அறிவு மிகுந்து நவதுவாரங்களாலும் வழிகிறது துடையும்
LikeReplyMessage218 February at 17:02
Ayakulan Ayan 100% correct pratheepan
LikeReplyMessage119 February at 17:59
Piratheepan Naguleswaran Hari Ramakrishnan Krishna ஐயா உம்மை பொறுத்த வரை நான் தகுதியும் அறிவும் குறைந்த சூத்திரனே ,ஆனால் என்னை பொறுத்தவரை நான் அடக்கு முறைக்கு எதிராக குரல் கொடுக்க முற்றிலும் தகுதி வாய்ந்த மானிடனே , அதுவே தான் உள்ள வித்தியாசம்.
LikeReplyMessage119 February at 18:10
Venilan Vairavapillai இக் கண்டனங்கள் அர்த்தமற்றவை ..................................பிறக்கும் ஜாதியால் அன்றி வாய்க்கும் இயல்பாற்றலினாலேயே ஒருவர்,
எந்த வர்ணத்திற்குரியவர் என இனங்காணப்படுகிறார்.....என்ற மேற் கோள் மூலம் தெளிக .
LikeReplyMessage119 February at 21:05
Venilan Vairavapillai கர்நாடக இசை நிகழ்வுகளிலும் இதே நிலைதான், அந்தணரல்லாதோர் பாடல் புனைவது பாவமென கருதப்படுகிறது. அந்தணர் அல்லாதோரின் கீர்த்தனைகளை அல்லது உருப்படிகளை பலர் கச்சேரிகளில் சேர்ப்பதில்லை.
LikeReplyMessage218 February at 13:35
Amarasingam Ingaraneshan அப்படி என்றால் தியாகராஜ பாகவதரின் உருப்படிகள் சேர்க்கப்படுதில்லையா
Venilan Vairavapillai Amarasingam Ingaraneshan அவர்கள் பிராமணர்கள் .
Venilan Vairavapillai Hari Ramakrishnan இவர்களுக்கு பல மேடைகளில் தடை இருந்ததை அறிவீர்களா (சீர்காழி உட்பட )
Mohamed Ahmed இவனெல்லாம் திருந்துவான்னு நினைக்கிற. அது நாய் வாலுங்க.
LikeReplyMessage618 February at 14:08
Muhunthan Sayanolibavan தத்தமது சமயச்சார்புகளை இறுகப்பபற்றிக் கொண்ட. பல சமயிகள் இந்துத்வா மற்றும் சமயச்சார்பின்மை பற்றி நீட்டி முழக்குவர்
இந்தியாவில் நிநின்று கொண்டு பேசும் இந்தக் கோசங்களை அரபுலகத்திலும் ரோமாபுரியிலும் போய் முழங்குவார்களா
பிரித்தானியாவின் தேசியக்கொடி unionja
...See more
Rajasekaran Raja மூலவிக்கிரத்தைப் பெயர்த்து 
தங்கள் வணக்கத்தலங்களுக்குப் படிக்கட்டாய் போடுமளவுக்கு மதவெறி
LikeReplyMessage218 February at 20:18
Mohamed Ahmed அப்படி என்ன பகுத்தறிவுக்கு பொருத்தமான கருத்துக்கள் அந்த கட்டுரையில் உள்ளது.
Venilan Vairavapillai Rajasekaran Raja கோவில் கற்களை பெயர்த்து உருமாற்றி காட்டியதே அநேகம்.
குமரன் தமிழ் வர்ணாசிரமத்தில் எனக்கு முரண்பாடுண்டு
வேதம் கூறிய நால்வகை பிரிவு என்பது மனித இனத்தின் வகைகள். இவ்வுலகில் வாழும் மக்களை இந்த நால் வகையில் அடக்கி விடலாம் ஏன் இன்றுள்ள ஒவ்வோர் சாதியிலும் இந்நால் வகையினரும் இருக்கிறார்கள்
...See more
LikeReplyMessage418 February at 16:07
Chinniah Ratnavadivel பலர் இங்கே ஆழ்ந்த சிந்தனைக்கு ஓய்வளித்துவிட்டு பாரபட்சமாக கருத்து பதிந்துள்ளனர். நீங்கள் சொல்வது அறிவு சார்ந்தது. வாழ்த்துக்கள், தொடருங்கள்!
Esakki Muthu அருமையான விளக்கம்.மேலும் தொடருங்கள்.
LikeReplyMessage118 February at 17:51
Shajahan வருணாசிரமம் ஒரு காலத்தில் பெருத்த மாக இருந்திருக்கலாம்.தற்போது பொருந்தாது..ஐயா
Chinnasamy Rajendiran ஏற்ற தாழ்வை ஒரு தத்துவம் தூக்கி பிடிக்கிறது என்றால், ஏற்றத்தில் இருப்பவர் அதை போற்றலாம். தாழ்ந்தவர் என்று இருப்பவர் எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும்.?. தலைவலியும் வயிற்றுவலியும் அனுபவித்தால்தான் கொடுமை புரியும். மனிதனை பிரித்து வைக்கும் எந்த தத்துவமும் தூக்கி எறியப்பட வேண்டியதே. என்ன கொடூர தத்துவம்?!?!?.
LikeReplyMessage518 February at 20:40
Amarasingam Ingaraneshan உண்மை
LikeReplyMessage119 February at 14:52
Sownthala Ath மிகவும் நன்று
LikeReplyMessage119 February at 16:36
Thirugnanasambandam Narayanasamy Sir I had high regards on you until now. It is shocking that you too support varnasiram I cannot believe it. Our bible is Thirukkural. All other books our pastime activity.
Yavanika Sriram எக்காலத்திற்கும் பொருந்தும் முழு உண்மை என்பது எப்போதும் இல்லை முரண்பாடுகளூம் மாற்றங்களும் நிகழ்தகவாய் இருக்கும்டா வெண்ணை
LikeReplyMessage118 February at 23:14
Subramanian Ramakrishnan Arimalam நன்கு சொன்னீர்கள் ஐயா!
Navaratinam Vishnukanth Unakku kalyanam mudinjutha
Elangovan AN ராஜாஜியை புரிந்துகொண்டாா்களா ஊகூம்
LikeReplyMessage119 February at 02:20
தர்ஷன் இராஜேந்திர சோழன் பாஜாகாவின் கில்லாடியே.. 

தேவையில்லாதவற்றை 
...See more
LikeReplyMessage419 February at 03:36
Muhunthan Sayanolibavan திராவிடம் முடிந்து இப்போ தனித்தமிழாகியாச்சா நன்று நன்று
LikeReplyMessage119 February at 09:43
தர்ஷன் இராஜேந்திர சோழன் எப்போதுமே நாம் (சைவ)தமிழர்! 
எம்மை பொறுத்தவரை 
திராவிடமும் ...
...See more
Muhunthan Sayanolibavan பாசுபதசைவம்
மாவிரதசைவம்
காபாலிகம்

காளாமுகம்
ஐக்கியவாதசைவம்
பேதவாதசைவம்
பாடாணவாதசைவம்
சிவசமவாதம்
சிவசங்கிராந்தவாதம்
சித்தாந்தசைவம்
ஸ்மார்த்தசைவம்
வீரசைவம்
பிரத்தியபிக்ஞானசைவம்

இவற்றுள் நீங்கள் எந்தச்சைவம்
Muhunthan Sayanolibavan தனித்தமிழ் வாதம் பேசுவதும்
ஆரியம் என்று அவதூறு பேசி உலகின் மூத்த அறிவியற் செழுமை நிறைந்த சம்ஸ்கிருதத்தை தூற்றுவதும் சரியல்ல நண்பரே .தமிட்பற்றாளர்கள் அதிகம் கொண்டாடும் திருவள்ளுவரும் திருமூலரும் கூட வடமொழியில் குரோதம் கொள்ளவில்லை.
தமிழ்ச்சொல் வடசொல் இர
...See more
LikeReplyMessage120 February at 13:56
தர்ஷன் இராஜேந்திர சோழன் கடல்போல் தமிழிருக்க 
தமிழ்க்கடவுளை வணங்க பிறமொழியெதற்கு? 
முப்பாட்டன் முருகனுக்கும் 
...See more
Loganathan Yogesh Om namachivaya namaga
Sankarlal Kottaiveedu Please refer the opinion of Sri sathya sai baba
Gunasekaran Guna இராவணன்கூட அந்தணன்தான்
Kathir Pillai சிங்களவர்கள் வாழ்விற்குக் காரணம் வர்ணாச்சிரம புறக்கணிப்பும் பௌத்தமுமே. நாம் !!
LikeReplyMessage219 February at 11:02
Sundarraj Inbanathan "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்பதனை கொள்கையலவில் கூட ஏற்றுக்கொள்ளாத எந்த தத்துவத்தை பற்றியும் விவாதிப்பது வீண்.
LikeReplyMessage419 February at 12:03
இரவி கார்த்திகேயன் தமிழக அறிஞர்கள் நடத்திய வேத மரபுக்கெதிரான போராட்டத்தை கம்பன் காவியத்தில் இருந்து மக்களிடம் கொண்டு சென்றுள்ளனர் . தாங்கள் உணர்ந்தும் தவறான் போக்குக்கு தமிழ் தளத்தில் நீங்கள் செல்லுவேன் என்றால் தமிழ் உங்களை ஏற்காது காசுக்கான பேச்சாலராக மட்டும் கருதும்
LikeReplyMessage119 February at 12:16
Ranjith Jeen அந்தணர்கள் ஒரு சரியான மொழியை கொண்ட இனத்தை சார்ந்தோர் அல்ல. அவர்களுக்கு தமது இனம் எது என்று சரியாக கூற முடியாது. 
அவர்களுடைய சாதி செருக்கை பாமர மக்களிடம் மட்டுமே காட்ட முடியும். 
இப்படி பட்டவர்கள் எம் இனத்திலும் வந்ததால் தான் எம் இனம் அழித்து. 
...See more
LikeReplyMessage119 February at 12:27Edited
Ravipalan Rasaratnam சீரியல் நாடகங்களுக்கு சற்றும் குறைவில்லாமல் அந்த வர்ண சிரமத்தை பற்றி எழுதிக்கொண்டே இருக்கிறீர்கள். போற போக்கை பார்த்தால் அந்த சிரமங்களையெல்லாம் எழுதித்தள்ள உங்களுக்கு ஒரு வசமாகும் போல இருக்கிறது. திரும்பத்திரும்ப தமிழர்கள் மேல் கண்ட குப்பைகளையெல்லா...See more
LikeReplyMessage719 February at 14:59
குமரன் தமிழ் படிக்காத பாமரர்களல்ல நம்முன்னோர் வந்தாண்ட அரசர்களின் பின்னால் வந்த பிராமணர்களால் ஏடுகள் பறிக்கப்பட்டு தில்லையில் பூட்டப்பட்டு முட்டாளாக்கி வர்ணாசிரமத்தை வளர்த்தெடுத்தார்கள் 
முன்னிருந்த சைவ சமயமரபில் எல்லோரும் சமஅறிவிலே இருந்ததால் தான் பின்வந்த வர்ணாசிரமத்தின் பின்பும் எல்லாகுலத்திலும் இருந்து நாயன்மார்களும் புலவர்களும் உருவாக முடிந்தது
Sownthala Ath துரத்தி அடித்தும் புத்தி வரவில்லை
LikeReplyMessage319 February at 16:40
Thirugnanasambandam Narayanasamy Sir with due respect to you varanasirm is a bull shit. TN people hate that word. We are happy with Thirukkural
LikeReplyMessage119 February at 20:19
Gk Ramachandran Good explanation
Raamachandran Jayaraman முதலில் பார்ப்பனர்களை அந்தணர் என்று கூறுவதை நிறுத்துங்கள்
LikeReplyMessage219 February at 22:35
Thoguluva Gnaneswaran In sham a thirty an a vichayanghal kalamkalamagha dhargha reedhiyaghave ulladhu.Oru Vaisavanin kudumbathil udalnalam vicharikka chendravar avar thirubiyavudan,avar utkarndha idhathai neeral kazhuvinadhai neril kandavan.itthanaikkum noyutravar administr...See more
Vigneswaramoorthy Uthesh காலத்துக்கொவ்வாத கருத்துக்களைக் கூறாதீர்கள் கைத்தொழில் மற்றும் தொழினுட்பப் புரட்சியினால் வர்ணாச்சிரமமே தலைகீழாக மாறிவிட்டது.
LikeReplyMessage320 February at 03:03
Kapil Kapilan Thaddila. Viluratha. Porukki vajiru Valakkira. Kuddathukku. Jathi perumai Ethukku. Road la Pichsai Edukkalam thaneeee thu thu 👠👠
Nathan Ragun நாம் எம்மைத் தாழ்த்தியதுமில்லை. தாழ்த்த அனுமதிப்பதுமில்லை!
LikeReplyMessage120 February at 03:29
Uthaya Prema Arumayana thelivana karuthukal. Miga nalla vidayankal. Thodarnthum ethir parkirom. Nanrigal.
Subadra Kaliyaperumal Nowadays people other than brahmins are seems to be danger
Panchanatham Muthukumaraswamy அய்யாவின்
விளக்கம்
நியாயமானது.

தத்துவத்தின்
துவக்கம்
யதார்த்தம
அறம் சார்ந்த 
தேடல் ஆனி
வேறினைப்
பிடுங்கி தண்ணீரில் அலசி
கசடுகளைக களைந்து
சுயம்பினை சாறுபிழிந்து
தருகிறார் கம்மவாரிதியார்.கைகூப்பிக் கேட்டுக்கொள்கிறேன்
கல்லெறியாதீர்கள்.
LikeReplyMessage320 February at 08:32
குமரன் தமிழ் கல்லெறியவில்லை என் சந்தேகங்களுக்கு விளக்கமளிக்க முடியுமா
Deva Praveran பிறட்டுகதைகள் மக்களித்தில் மதிப்புஇழந்துவரும் காலங்ளில் இப்படி தூக்கிபிடிக்க அன்றுதொட்டே ஆட்கள் இருந்துள்ளனர்..........(ஆணிய புடுங்க வேணாம்)
LikeReplyMessage220 February at 10:23
குமரன் தமிழ் எந்த பின்னூட்டலிற்கும் பதிலளிக்காத முறை முட்டாள்களுக்கு போதித்து தம்பக்கம் இளுக்கும் சில சமயங்களின் முறைமையை ஒத்தது 

ஓர் கருத்தை விவாதிப்பதாக இருந்தால் வரும் பின்னூட்டல்களுக்கு சரியான விளக்கமளிக்க வேண்டும் அதை விடுத்து கற்பனாவாதத்தில் கதை கூறிக்கொண்டு மக்களை ஏமாற்றி தவறான சிந்தனையை விதைப்பது தவறு
LikeReplyMessage220 February at 11:25
Raja Sekar வருணாச்சிரமம் என்னும் சாதிப்பிரிவினையை அன்றே சித்தர்கள் கடுமையாக சாடியுள்ளனர். சித்தர்கள் எனப்படுபவர்கள் கடவுள் அருள் பெற்றவர்கள். இந்த வருணாச்சிரமத்தை தூக்கிப்பிடிப்பவர்கள் அதனால் ஆதாயம் பெற நினைக்கும் கயவர்கள். சாதியை இனிமேலும் வேண்டும் என்பவர்கள் மனித சமுதாயத்திற்கு எதிரானவர்கள்.
LikeReplyMessage320 February at 12:00
Paranthaman Palani செத்துப்போன பிணத்தின் பெருமை பேசி என்ன செய்ய போகிறாய்...;பணம் பதவி உடையவனுக்கு எல்லாம் தலைவணங்கும் டிஜிட்டல் உலகம் இது....
சங்கீதா. இரா.கண்ணன் தமிழறிவு நிரம்பி தாங்கள் சங்த்தமிழ்ச்செழுமைகளை ஆராய்ந்து உலகோர்க்கு உரைத்த வண்ணம் இருந்திருப்பீர்கள்.மாறாக உங்கள் திறமை ஆரியத்திற்கு ஆலாலோம் பாடுகிறது.

தமிழ்ஓர் அறிவியல் மொழி. அது ஆக்கமில்லா கற்பனைக்குள் ஆட்படுத்தப்பட்டு விட்டது.


சங்க இலக்கியச்சூழலும் விஞ்ஞானப்புதுமையும் தமிழோடு இணைந்திருந்தால் அய்ரோப்போவில் பூத்த அறிவியல் புரட்சி இங்கே தான் மலர்ந்திருக்கும். தங்களைப்போன்றோர் தமிழ்ச்சொற்களை அறிந்தார்களே தவிர அறிவியல் செழுமைகளை அறிந்தார்களா?எண்ணிப்பாருங்கள் இதயத்தில் வாழ்வுக்கும் எல்லாம் தரும் அறிவியலோடு இனிக்கும் தமிழை இணைத்துக்காட்டுங்கள்.தமிழர்க்கு புது இன்பம் ஊட்டுங்கள்.
LikeReplyMessage120 February at 16:31Edited
Ezhil Arasu மனிதத்தை இணைக்கின்ற கருவிகளைப் பற்றி விவாதித்தால் பயனுண்டு. மக்களை துண்டாடச்செய்கின்ற அடுத்தவரை கீழிறக்கிப்பார்க்கும் கயமைத்தனம் நிறைந்த கருமத்தை தருமம் என்று போற்றுவதும், இலக்கியமாக்கி அழகு செய்வதும் என்ன பலனை இந்த பிரபஞ்சத்திற்கு கொடுத்துவிடப்போகிறது...See more
LikeReplyMessage320 February at 16:45
Shobisan Senthilnathan அறிவுசார்ந்த ஒரு விளக்கத்தை அறிந்துகொள்வதற்கு இங்கு யாரும் தயாரில்லை. 
கம்பவாரிதி ஒன்றும் பிராமணர் இல்லை பிராமணரை காப்பாற்றுவதற்கு.. 
பிராமணர்கள் கூறுகிறார்கள் இவர் தம்மை இழிவுபடுத்துவதாக.. பிறர் கூறுகிறார்கள் இவர் பிராமணியத்தை காப்பாற்றுவதற்காக எழுதுகிறார் என்று.. ஒன்னும் புரியலடா சாமி.
Piratheepan Naguleswaran பிராமணர் என்பது வேறு பிராமணீயம் என்பது வேறு. பிராமணீயத்தை பிராமணர்கள் தான் ஆதரிக்க வேண்டும் என்பதில்லை( உ +ம் கம்பவாரிதி ,நரேந்திரமோடி etc ). சுயநலத்திற்காகவோ அல்லது அறியாமையின் காரணமாகவோ இவ்வாறு செய்வோருண்டு. மதத்தால் மூளைச்சலவை செய்யப்பட...See more
LikeReplyMessage221 February at 05:08
Rajeswaran Kalyanaraman Everything is waste in 2017
Vadakovy Varatha Rajan Please read VOLKAVIL ERUNTHU KANKAI VARAI
Raja Manickam தங்களுடைய விளக்கத்தை 'You Tube' வாயிலாக நிறைய முறை கேட்டுள்ளேன். கேட்கும்பொழுது ஏற்பட்ட அதே ஆனந்தம் படிக்கும் பொழுதும் ஏற்படுகின்றது.

தாங்கள் விளக்கும் விதம் மிகவும் அருமை. தாம் கசடறக் கற்ற விஷயத்தை, அனைவருக்கும் புரியும் விதத்தில் தெளிவாக விளக்கி உள
...See more
T Dishanthan Dishanthan இன்றைய கம்பன் கழக நிலமை கவலைக்கிடம்....
Sundararajah Gnanamuthu கம்ப இராமாயணமே நம் மீது திணிக்கப்படது தானே!
நம்மவர்களை அழித்தவர்களை தமிழர்கள் தெய்வமாக வழிபடுகின்ற கொடுமை!!
மலர்கள் ராசு வரலாற்றையே
விழங்கி ஏப்பம் விட்ட இழிகளின்
கருத்தை பற்றி பேசுவதே
...See more
LikeReplyMessage121 February at 20:48
Surya சாம,பேத,தான,தண்ட வழிமுறைகளை காலம் தோறும் கைக்கொள்வது பிராமணிய தந்திரம். முகத்திரை கிழிந்தாலும், அம்பலப்பட்டாலும் ஒன்றுமே நடவாதது போல, ஏகாந்த நிலையில் பேசுவதும், புராணகாலம் தொட்டு புதிதில்லை. பிராமணரை அந்தணர் என்று ஏற்றிப் போற்றுவ திலே, அவருடைய நோக்கம் புலப்படுகிறது. அதை நம்புதற்கும் ஒரு கூட்டமிருப்பதால் நாவு நடுங்காமல் பேசுகிறார்கள்!
UnlikeReplyMessage321 February at 21:20Edited
மலர்கள் ராசு அந்தணர் என்ற வார்த்தையை
கேட்க மறுக்கும் சூழல்
இன்று
...See more
Surya என்ன சொல்ல வருகிறீர்?. அந்தணன் என்பதற்கு ஆதியில் உயர்வான அதாவது நற்குணம் கொண்டோன் என்று அர்த்தம். அதை ஆதிக்கம் செலுத்திய பிராமணியம் எப்படி தனக்குத்தானே வரித்துக்கொள்ளலாம். அதை நாங்கள் ஏன் ஏற்க வேண்டும். இழிவான மலிவான குணங்கள் அனைத்தும் புராணங்களை படித்தால் பிராமணர்களுக்கே உண்டெனத் தெரிகிறது. பிறப்பின் அடிப்படையில் இழிவு செய்தல் எமக்கு ஏற்பில்லை.
Surya கம்பவரிதி தன் பதிவில், பிராமணன் தான் தனக்கு கீழிருக்கும் சாதியை இழிவு செய்கிறானா, மற்ற பிரிவினர் செய்வதில்லையா என்று கேட்கிறார். இது, சிறுபிள்ளைத் தனமாக உங்களுக்குப்படவில்லையா, கம்பவரிதி?. படிநிலை ஏற்பாட்டை ஏற்படுத்திய காரண கர்த்தாக்கள், விளைவையே காரணமாக்கும் விந்தை அது. இதில் இவரது கதையை கேட்டவன் சாந்திகொள்வதாகவும், தேநீர் கூட குடிக்காமல் இந்த அரிய கதையை கேட்டு மெய்சிலிர்ப்பதாகவும், இவரே கற்பனையில் சஞ்சரிப்பாராம்!
LikeReplyMessage421 February at 22:41
Dev Raj கம்ப வாரிதி - சரியான வடிவம். வாரிதி - கடல்,
Dev Raj Surya எப்படி நம்மாழ்வாரை உயரத்தில் தூக்கி வைத்தனர் இந்த பிராமணர்கள் ? கசாப்புக்கடைக்காரர் கூறிய ‘வ்யாத கீதை’க்கும் ஏன் அங்கீகாரம் தந்தனர் ? மூல நூல்களை ஒருமுறை வாசித்துப் பார்ப்பது நல்லது
Sundararajah Gnanamuthu நம் காலத்திலாவது நம் சகோதர்களை சாதி ரீதியாக இழிவு படுத்துவதற்கு முற்றுப்புள்ளி வைப்போம்!
யத்தத்தில் தோற்ற ஆண்ட மக்கள்,சமரசத்திற்கு வராதபோது இழிகுலம் ஆக்கப்பட்டார்கள் என்பதிலும் உண்மை உண்டு.!!

Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...