•                                                 உகரத்தில் வெளியாகும் எழுத்தாக்கங்களுக்கு அவ்வவற்றின் ஆசிரியர்களே பொறுப்பாளிகளாவர்..!

Monday, February 25, 2019

பல புதினங்களுக்கும் புனைகதைகளுக்கும் பெயர் பெற்ற எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் அண்மையில் இலங்கை ஜெயராஜ் அவர்களைப்பற்றி இளம் எழுத்தாளர் துலாஞ்சனனின் 'அலகிலா ஆடல்' நூல் விமர்சனத்தில்  பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
//சைவத்தைப் பற்றி மெய்யாக அறியவிழைபவர்கள் தருமபுரம் ஆதீனம் போன்ற உண்மையான அறிஞர்களை தேடிச்சென்றாலொழிய நச்சுக்கிண்ணங்களை மட்டுமே பெறுவார்கள். எங்கோ சைவம் இங்குள்ள திராவிட அரசியலுடன் உரையாடத் தொடங்கியதன் விளைவு இன்று அதிலிருக்கும் காழ்ப்பு. அடிப்படையில் சைவம் ஒரு மெய்ஞானவழி. அதன் முதல்முடிவான நோக்கம் மெய்மையினூடாக வீடுபேறே. அதைவிடுத்து அரசியல்காழ்ப்புகளை சைவம் என்றபேரில் கொட்டுபவர்கள் சைவத்தை அழிப்பவர்கள்.

இன்றைய சூழலில் தமிழில் சைவம் பற்றி மேடைகளில் பேசுபவர்களில் இலங்கை ஜெயராஜ் அவர்களை மட்டுமே கருத்தில்கொள்ளப்படவேண்டியவர் என்று கருதுகிறேன்.//
இதற்கு பதிலளித்த துலாஞ்சனன் "இன்றைய சூழலில் சைவம்  பற்றிப் பேசுபவர்களில் கருத்தில் கொள்ளப்படவேண்டியவர் என்று இலங்கை ஜெயராஜ் அவர்களை விதந்து கூறியிருக்கிறீர்கள்.  கம்பவாரிதி அவர்கள் இலங்கையின் காத்திரமான ஆளுமையே. எனினும்,  சில இடங்களில் அவர் மீது  எனக்கு மாற்றுக்கருத்து உண்டு." எனக் குறிப்பிடுகையில் மீண்டும் ஜெமோ இதற்குப் பதிலளித்துள்ளார்.
//என் கட்டுரையில் சைவப்பேச்சாளர்களைப் பற்றியே சொல்கிறேன். இதை நான் முன்னரும் எழுதியிருக்கிறேன். தமிழ்ச்சைவம் பெரும்பேச்சாளர்களை உருவாக்கி, அவர்களினூடாக வளர்ந்தது. தமிழ் மேடைப்பேச்சுக்கலையே பெரும்பாலும் சைவப்பேச்சாளர்களின் கொடை – அவர்களிடமிருந்தே அந்த மொழியும் முறையும் திராவிட இயக்கப் பேச்சாளர்களிடம் சென்றது. ஆனால் இன்று சைவப்பேச்சாளர்களில் சைவத்தை ஓரளவேனும் உணர்ந்துபேசுபவர்கள் இல்லை. சைவத்தின் பெயரால் இன- மொழிக் காழ்ப்புகளை முன்வைப்பவர்களே உள்ளனர். விதிவிலக்காக சைவம் பற்றிப் பேசும் பேச்சாளர் இலங்கை ஜெயராஜ், நான் சொன்னது இதுவே.//
இவை தொடர்பான இரு கடிதங்களையும் எழுத்தாளர் ஜெயமோகனின் இணையத்தளத்தில் கீழ்வரும் இணைப்புகளினூடு பார்வையிடலாம்.
https://jeyamohan.in/118190#.XHP596IzbDA
https://jeyamohan.in/118336#.XHQAn6IzbDA

Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...