•                                                 உகரத்தில் வெளியாகும் எழுத்தாக்கங்களுக்கு அவ்வவற்றின் ஆசிரியர்களே பொறுப்பாளிகளாவர்..!

Saturday, April 20, 2019

கம்பவாரிதிக்கு 'வலம்புரி' புருசோத்தமன் எழுதிய அன்பு மடல்கள்: 27.03 - 09.04 /2019 (பத்துப் பாகங்கள்).



புருசோத்தமன் எழுதும் கம்பவாரிதிக்கு ஓர் அன்பு மடல் (பாகம் 1)

பெருமைமிகு கம்பவாரிதி இ.ஜெயராஜ் அவர்களுக்கு அன்பு வணக்கம்.
தங்களின் பேச்சாற்றலால்,  ழத்தமிழினம் உலகப் புகழ் பெறுவது கண்டு
புளகாங்கித
மடைகின்றோம். தமிழகத்தில் தங்களுக்கு வழங்கப்படும் விருதுகள் தங்களினூடாக ஈழத்தமிழினத்திற்குரியது என்ற இறுமாப்பில், எம் தோள் புயங்கள் உயருகின்றன.
கம்பன் விழா, திருக்குறள் வகுப்புக்கள், சேக்கிழாரின் பெருமை, திருவாசகத்தின் மகிமை
என்றவாறு தங்கள் தமிழ்ப்பணி நீண்டு செல்கின்ற அதேநேரம், எங்கள் ஈழத்துக்
கலைஞர்களுக்கும் படைப்பாளிகளுக்கும் களம் அமைத்து மேடையேற்றி எம்மவர்களின் திறத்தை
பகிரங்கப்படுத்தும் தங்களின் அளவு கடந்த பணிக்கு என்றும் எம் நன்றிகள். யாழ்ப்பாணத்தில் 
கடந்த மார்ச் மாதம் 15, 16, 17 ஆம் திகதிகளில் நடந்த கம்பன் விழாவின் முதல் நாள் நிகழ்வில் பொன்னாலை சந்திரபரத கலாலய இயக்குநர் ஸ்ரீமதி ஸ்ரீதேவி கண்ணதாசன் அவர்களின் நெறியாள்கையில் இடம்பெற்ற நாட்டிய வேள்வி கண்டு வியக்காதவர்கள் யார் உளர்.

பரதனின் பெருங்குணத்தினூடு அன்பின் மகிமையை வெளிப்படுத்திய அந்த நாட்டிய வேள்வி
பார்வையாளர்களின் கண்ணீருடன் நிறைவு கண்டபோது ஈழத்தமிழனை எவரும் எதுவும் செய்ய
முடியாது என்ற எண்ணம் எம் இதயங்களை வைரப்படுத்தியது. அந்த வைராக்கியம் கலை, பண்பாடு, இயல், இசை, நாடகம் என்ற துறைகளில் நாம் விரைந்தெழுவோம் என்ற நம்பிக்கையைத் தருகிறது. எனினும் இலங்கை மண்ணில் எங்களின் வாழ்வு, எங்களுக்கு இருக்கக்கூடிய உரிமை, போரில் நொந்துபோன மக்களுக்கு மறுக்கப்படுகின்ற நீதிரூபவ் அரசியல் என்ற பெயரால் எங்கள் மக்களை காட்டிக் கொடுக்கின்ற யூதாஸ்கள் இவர்களையெல்லாம் எண்ணிப் பார்க்கும்போது தான் இக்கடிதத்தை உங்களுக்கு எழுதியாகவேண்டும் என்ற முடிவுக்கு வந்தோம். நீங்கள் பேசுகின்ற மேடைகளில் திரும்பத் திரும்ப எடுத்துரைக்கின்ற அறத்தின் பாற்பட்டு எங்கள் தமிழ் அரசியல் தரப்பில் ஏற்படவேண்டிய ஒற்றுமை பற்றிப் பிரஸ்தாபிப்பதும்
எங்களை ஏமாற்றுகின்ற தமிழ் அரசியல்வாதிகளை வெளியேற்ற வேண்டியதன் அவசியத்தையும்
இவ்விடத்தில் எடுத்துரைப்பது இக்கடிதத்தின் முக்கிய நோக்கமாகும்.

அன்புக்குரிய கம்பவாரிதி அவர்களே!...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் அதிலும் குறிப்பாக இலங்கைத் தமிழரசுக் கட்சியினரின் போக்குகள் எங்கள் தமிழினத்தை நிர்மூலமாக்குபவையாக இருக்கின்றன என்பதை நாம் கூறி நீங்கள் அறியவேண்டியதில்லை. இருந்தும் இலங்கைப் பாராளுமன்றத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் கலைப்புச் செய்தபோது, கூட்டமைப்பினர் நீதிமன்றேறி பாராளுமன்றக் கலைப்பு அரசியலமைப்புக்கு எதிரானது எனக்கூறி வாதிட்டனர். அந்த விவாதம் நீதிமன்றால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, பாராளுமன்றக் கலைப்பு இரத்துச் செய்யப்பட்டது.

இச்சம்பவம் நடந்தேறிய போது தாங்கள் உகரத்தில் ஓர் ஆக்கத்தை வரைந்தீர்கள். அதை
வாசித்தபோது, அறம் உரைக்கவல்ல கம்பவாரிதி அவர்கள் நிலைமையைத் தவறாகப்
புரிந்துவிட்டார் என்ற வேதனை என்னை வாட்டியது. இருந்தும் அந்த நேரத்தில் அது பற்றி நாம் தங்களுக்குக் கடிதம் எழுதியிருந்தால், அது கூட்டமைப்பு மீது கொண்ட காழ்ப்புணர்வின் எண்ணம் என்றே அந்தக் கடிதத்தை தங்களும் மற்றவர்களும் பார்த்திருப்பர். ஆகையால்தான் காலம் வரும் வரை காத்திருந்தேன். அந்தக் காலம் வந்துவிட்டது. இப்போது உண்மை வெளிப்பட்டுள்ளது.

ஐ.நா. மனிதவுரிமை ஆணையம் விதித்த நிபந்தனைகளை நிறைவேற்றுவதற்கு இலங்கை அரசுக்குக் 
காலஅவகாசம் வழங்கக்கூடாது என தமிழ்த் தரப்புக்கள் வலியுறுத்தின.
ஆனால் அதனை வலுக்குறைப்புச் செய்யும் வகையில் இலங்கைத் தமிழரசுக் கட்சி காலஅவகாசம் வழங்க வேண்டும் எனக்கூறியது. காலஅவகாசம் என்பது தவறான வார்த்தை என்றும் இலங்கை மீதான ஐ.நாவின் மேற்பார்வை என்பதாகவும் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் விளக்கம் கொடுத்திருந்தார். இப்போது நிலைமை என்ன என்பது நீங்கள் அறியாததல்ல. கால அவகாசம் கேட்டிருந்த இலங்கை அரசு; கலப்பு நீதி மன்றத்தை நிராகரித்து விட்டது. இலங்கை வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன அவர்கள் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் கூட்டத் தொடரில் உரையாற்றும் போது கலப்பு நீதிமன்றம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று மிகத் தெளிவாகக் கூறியுள்ளார். உள்ளூர் நீதிபதிகளைக் கொண்டு விசாரணை இடம்பெறும் என்பது அவரின் அறிவிப்பு. அந்த அறிவிப்புத் தொடர்பில் ஐ.நா. மனிதவுரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் எந்த எதிர் வினையும் வெளிப்படுத்தப்படவில்லை.

ஆக, இதற்கு முன்னரும் கால அவகாசத்தைக் கோரிப் பெற்றுக் கொண்ட இலங்கை அரசு காலம்
கடத்திவிட்டு இப்போது வெளிநாட்டு நீதிபதிகள் இடம்பெறக்கூடிய கலப்பு நீதிமன்ற
முறைமையைத் தூக்கி எறிந்துள்ளனர். எனினும் கலப்பு நீதிமன்றத்தை இலங்கை அரசு நிராகரிக்க முடியாது என்றும் அவ்வாறு நிராகரித்தால் இலங்கை விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்குக் கொண்டு செல்வோம் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பாராளுமன்றத்தில் வைத்துக் கூறியுள்ளார். அவர் கூறியதன் உள்ளார்ந்தம் தங்களுக்குத் தெரியாததல்ல.
✿ ✿ ✿ ✿ ✿ ✿


புருசோத்தமன் எழுதும் கம்பவாரிதிக்கு ஓர் அன்பு மடல் (பாகம் 2)

அன்புக்குரிய கம்பவாரிதி அவர்களே! 
கால அவகாசம் வழங்கக்கூடாது என்று ஒட்டு மொத்தத் தமிழர்களும் கேட்ட போது காலஅவகாசம் வழங்க வேண்டும் என தமிழரசுக் கட்சி விடாப்பிடியாக நின்றது. இங்கு தமிழரசுக்கட்சி என்பது அதன் தலைவரின் கட்டுப்பாட் டில் கூட இல்லை என்பது வேறு விடயம்.

ஆக, தமிழரசுக் கட்சியை இப்போது முழுவதுமாக நிர்வகிப்பது யார் என்பது தசரதச் சக்கரவர்த்தியின் அரசாட்சியை எடுத்துரைக்கும் உங்களுக்குத் தெரியாமல் இருக்க நியாயமில்லை. 
தமிழரசுக்கட்சி தனியொருவரின் ஆதிக்கத்திற்குள் இருக்கிறதா? அந்தக் கட்சியின் தலைவர் பெயரளவில் மட்டுமே இருக்கிறாரா? என்பது பற்றி யயல்லாம் நமக்குக் கவலையில்லை. தனிமனித ஆளுகைக்குட் பட்டு ஒரு கட்சி செயற்படு கிறது என்றாலும் அந்தக் கட்சி சரியாகச் செயற்பட்டால், அதற்கு விமர்சனம் ஏற்பட நியாயமிருக்காது. ஆனால் தனிமனித
ஆளுகையின் கீழ் எம் இனத்தின் தலைமை என்று கூறக்கூடிய ஓர் அரசியல் கட்சி தவறான பாதையில் பயணிக்கும்போது அதுபற்றிய விமர்சனத்தின் முன்னுரை தனி ஆள் ஆளுகை பற்றியதாக இருப்பது தவிர்க்க முடியாததே. எம்மைப் பொறுத்தவரை இலங்கைத் தமிழரசுக் கட்சி தமிழ்மக்களை படுகுழியில் வீழ்த்துகிறது. எனினும் அது பற்றி மக்களை விழிப்படையச் செய் வதற்கு ஆளில்லை. அப்படித் துணிந்து ஒருசிலர் கருத்துரைத்தாலும் அவர்களை விமர் சித்து அவர்களின் நேர்மைக்குப் பங்கம் இழைக்கின்ற பாவங்களும் நடப்பதனால் தீவினை கொளுந்து விட்டு எரிகிறது.

மதிப்பார்ந்த கம்பவாரிதி அவர்களே! ஐ.நா. மனிதவுரிமை ஆணையத்தின் கூட்டத் தொடரில் காலஅவகாசம் பெற்றுக் கொண்ட இலங்கை அரசு என்பது இலங்கைத் தமிழரசுக் கட் சியால் பாதுகாக்கப்பட்ட அரசு. நீதிமன்றம் ஏறிய தமிழரசுக் கட்சி, பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவின் அரசை ஜனாதிபதி மைத்திரி கலைத்தது தவறு என்று வாதிட்டது. இதற்கு மேலாக இலங்கைப் பாராளுமன்றத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்ட போது பிரதமர் ரணில் மீதும் அவரது அரசு மீதும் எங்களுக்கு நம்பிக்கை உண்டு என ஆதரவாக வாக்களித்தவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரில் இயங்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியினர் என்பது மறுக்க முடியாத உண்மை.

ஆக, நாம் இப்போது கேட்பதெல்லாம்; தமிழரசுக் கட்சி யால் பாதுகாக்கப்பட்ட இலங்கை அரசு- தமிழரசுக் கட் சிக்கு நம்பிக்கைக்குரிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அரசு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் கலப்பு நீதிமன்றம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறும்போது அதனை ஐ.நா. மனிதவுரிமை ஆணையாளரோ அன்றி, வெளிநாட்டுப் பிரதிநிதிகளோ எதிர்க்க முடியுமா என்ன? இங்குதான் பாராளுமன்றக் கலைப்புக்கு எதிராக நீதிமன்றம் சென்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்கமீது நம்பிக்கை உண்டு எனக்கூறி ஆதரவளித்த தமிழரசுக் கட்சியின் செயற்பாடு தமிழினத்திற்கானதா? அல்லது சொந்தநலன் சார்ந்ததா? என்பதை அனைத்து அறத்தையும் ஆழ்ந்துணர்ந்த தாங்கள் அறிவீர்கள் என்பது எம் அசைக்கமுடியாத நம்பிக்கை.

நீதிமன்றத்தை நாடி, பாராளுமன்றக் கலைப்பை நிராகரித்த போது, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கமீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு என அவரை ஆதரித்து வாக்களித்த போது கலப்பு நீதிமன்றத்தை நீங்கள் ஆதரிப்பீர்களா? சர்வதேச போர்க்குற்ற விசாரணையை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா? என்றொரு வார்த்தையை பிரதமர் ரணிலிடம் கேட்டிருந்தால், அதுபுத்திசாலித்தனம். ஆனால் நாங்கள் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை என்று தமிழரசுக்கட்சி கூறுகின்றதெனில், அந்தக் கட்சிக்கு தமிழினத்தின்பால், காணாமல் போன உறவினர்கள் விடுகின்ற கண்ணீரின் பால், சிறைகளில் வதைபடும் தமிழ் அரசியல் வாதிகளின் பால் எந்த அக்கறையும் இல்லை என்பதை நீங்கள் நிச்சயம் ஏற்றுக் கொள்வீர்கள்.

அன்பு மிகுந்த கம்பவாரிதி அவர்களே! கம்பராமாயணத்தில் மந்தரையின் மனக் கூனை, கைகேயியின் சண்டா ளத்தனத்தை, இராவணனின் விரச புத்தியை, சடாயுவின் தியாகத்தை, பரதனின் அன்புடைமையை, கோசலையின் குணவியல்பை, அனுமனின் பிரமச்சாரிய வீரத்தை எல்லாம் அக்குவேறு, ஆணிவேறாக அணுகிப் பார்த்து கம்பனைக் கடந்து கருத்தோவியம் படைக்கும் தாங்கள் எங்கள் தமிழ் அரசியல் தலைமையின் கீழ் மைத்தனத்தை நுணுக்கமாக ஆராயாமல் விட்டமை மன வருத்தம் தருகிறது.
அதுமட்டுமன்றி தமிழினத்தின் நம்பிக்கைக்குரிய அரசியல் தலைவராக இருக்கின்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களைத் தாங்கள் புறந்தள்ளுவதும் வேதனைக்குரியது.
வல்லவர்களை விட நல்ல வர்களே நமக்குத் தேவை என்றார் விடுதலைப்புலிகளின் யாழ். மாவட்டப் பொறுப்பாளராக இருந்த மூர்த்தி அவர்கள். அந்தக் கருத்து மிகவும் முக்கியமானது. இராமனின் நேர்மையும் ஏகபத்தினி விரதமும் தந்தை சொல்லை சிரமேற்கொண்ட பண்பும் பெரியவர்களை மதிக்கின்ற உயர்ந்த குணவியல்புமே இராமனைப் போர்க்களத்தில் வெல்ல வைத்தது.
சிவனார் கொடுத்த வாளும் கைநழுவும் அளவில் இராமனின் திரிகரண சுத்தி உயர்ந்து நின்றது. இப்போது நமக்குத் தேவை நம்பிக்கைக்குரிய, நேர்மைக்குரிய தர்மத்தைப் போற்ற வல்ல தலைவர்களே. அத்தகைய தலைவர்கள் முன்னிற்கும் போதுதான் எங்களுக்கான வெற்றியை தர்மம் பெற்றுத் தரும் என நம்புகிறேன்.


✿ ✿ ✿ ✿ ✿ ✿


புருசோத்தமன் எழுதும் கம்பவாரிதிக்கு ஓர் அன்பு மடல் (பாகம் 3)

.நா. மனிதவுரிமைகள் ஆணையத்தின் நிபந்தனைகளை நிறைவேற்ற  இலங்கை அரசுக்குக் கால அவகாசம் கொடுப்பதா?  இல்லையா? என்ற விடயத்தில் கூட நாம் ஒருமித்து நிற்கமுடியாமல் போய்விட்டது.

கால அவகாசம் கொடுக்க வேண்டும் எனக்கூறிய தமிழரசுக் கட்சிக்கு கால அவகாசம் காலத்தைக் கடத்தும் என்பதனைக்கூட  உணரமுடியவில்லை. 
காலத்தைக் கடத்துவதன் மூலம் சம்பந்தப்பட்ட விடயம் நீத்துப் போவதற்கு  வழிவகுக்கும் என்பதே இலங்கை அரசின் உள்நோக்கம். இருந்தும் இவற்றை உணராமல் அல்லது உணராதது போல தமிழரசுக் கட்சி செயற்படுவதுதான் வேதனைக்குரியது. தமிழரசுக்கட்சி மீது  இவற்றை நாம் கூறும்போது தமிழரசுக்கட்சிக்கு நாம் எதிர்ப்பு என்று தயவுசெய்து நினைத்து விடாதீர்கள்.

துரியோதனா! நீ செய்வது தர்மமன்று  எனக்கூறிய  விதுரனே துரியோதனனைக் காப்பாற்ற நினைத்த முதல் ஆள். 
மாறாக துரியோதனா!  நீ செய்வது சரி என்று யாரெல்லாம் கூறினார்களோ அவர்கள் தான், தன் ஆதரவாளர்கள் என்று துரியோதனன் நம்பினான். ஆனால் அது உண்மை அன்று என்பதை குருசேத்திரப் போரின் 18ஆம் நாளில்தான் துரியோதனன் உணர்ந்திருப்பான்.

என்ன செய்வது, காலம் கடந்த பின்பு- எதுவும் செய்ய முடியாதென்ற சூழ்நிலை உருவாகிய பின்பு உண்மையை உணர்ந்து கொண்டாலும்  அதனால் பிரயோசனம் ஏதுமில்லை என்றாகிவிடுகிறது.
இதுபோலத்தான் எல்லாமே. எங்கள் போராட்ட அமைப்புக்கள் சில தீர்மானங்களை எடுத்தபோது அவற்றைத் தவறு என்று நம்மில்  யாரேனும் ஒருவர் எடுத்துரைத்திருந்தால்கூட இன்று நிலைமை வேறாக இருந்திருக்கும்.
போராட்ட அமைப்புக்களைக் குறைபடுவதாகத் தங்கள் கருத்து இருந்து விடக்கூடாது என்பதிலேயே நம்மவர்கள் கண்ணும் கருத்துமாக இருந்தார்களேயன்றி, சரியானதைக் கூறுவதற்கு  எவரும் முன்வரவில்லை. அவ்வாறு முன்வந்திருந்தாலும் போராட்ட அமைப்புக்களின் முடிவு  கருத்துரைத்தவருக்குப் பாதகமாகக்கூட இருந் திருக்கலாம் என்பதையும் நாம் நிராகரிக்கவில்லை. எது எவ்வாறாயினும் இன்றி ருக்கக்கூடிய சூழ்நிலையில் தமிழரசுக் கட்சியின் தவறான அணுகு முறைகளை யாரெல்லாம் விமர்சிக்கின்றார்களோ அவர்கள் தமிழரசுக் கட்சியைப் பாது காக்கப் பாடுபடுகின்றனர் என்பதே பொருளாகும்.
அந்தவகையில் நாமும் தமிழரசுக் கட்சியின் பாதை தவறிய பயணத்தை இங்கு சுட்டிக் காட்டுவது அந்தக் கட்சி சரியான பாதையில் பயணிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே. இதற்கு மேலாக,  தமிழ் மக்கள்  தமிழரசுக் கட்சியை  நம்பி வாக்களித்தனர். அந்த நம்பிக்கைக்குத் துரோகம் இழைப்பதாகச் செயற்படுவது எந்தவகையிலும் தர்மமன்று.  
அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் என்ற இளங்கோவடிகளின் அறக்கருத்து  இங்கு நோக்குதற்குரியது. கண்முன்னே நடப்பது நம்மக்களை ஏமாற்றுகின்ற  கபட நாடகம் என்பதை அறிந்தும் அதுபற்றி பேசாதிருப்பது பெரும் பிழை என்பது  நம் நிலைப்பாடு. இதனையே இதிகாச புராணங்கள் உலக மக்களுக்கு எடுத்துரைக்கின்றன என்பதைத் தாங்கள் ஒரு போதும் மறுக்கமாட்டீர்கள்.
ஆக, நாம் சொல்லிய மேற்போந்த பொருளின் அடிப்படையில் எங்கள் கருத்தை நோக்குங்கள் என்பதுதான்  நம் கோரிக்கை. இவை ஒருபுறமிருக்க, இப்போது ஐ.நாவில் கால அவகாசத்தைப் பெற்றுக் கொண்ட இலங்கை அரசு கலப்பு நீதிமன்றத்தை  ஏற்கமுடியாது என்கிறது.
வெளிநாட்டு நீதிபதிகளும் பங்கேற்கக்கூடியதான கலப்பு நீதிமன்றை நிராகரித்தால், முடிவு உள்நாட்டவர்களே விசாரணை நடத்துவதாக இருக்கும். உள்நாட்டவர்கள் விசாரணை நடத்தினால்  நிலைமை என்னவாக இருக்கும் என்பதை நாம் கூறி நீங்கள் அறிய வேண்டிய தேவை இல்லை.
மன்னாரில் எடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீதான காபன் பரிசோதனையின் முடிவு  350 தொடக்கம் 500 ஆண்டுகளுக்கு முற்பட்ட எலும்புக்கூடுகள் என்பதாக இருந்தது.
இரும்புக் கம்பிகளால் கைகட்டி, கால்கட்டிப் புதைக்கப்பட்ட எலும்புக்கூடுகள் மீட் கப்பட்டு அவற்றின் புகை ப்படங்கள் ஊடகங்களில் வெளிவந்த பின்பு குறித்த எலும்புக்கூடுகள்  500 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்பதாகப் பரிசோதனை முடிவு அமைகிறது எனில், தமிழினம் எவ்வாறு ஏமாற்றப்படுகிறது என்பது தெளிவாகிறதல்லவா. லைமை இதுவாக இருக்கையில், வெளிநாட்டு நீதிபதிகள் பங்கேற்காத விசாரணை; நடந்தால் என்ன, நடக்காமல் விட்டால் என்ன எல்லாம் ஒன்றுதான்.

✿ ✿ ✿ ✿ ✿ ✿
புருசோத்தமன் எழுதும் கம்பவாரிதிக்கு ஓர் அன்பு மடல் (பாகம் 4)

லப்பு நீதிமன்றத்தை இலங்கை அரசு ஏற்றுக்கொள்ளாது என வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன ஐ.நா. மனிதவுரிமைகள் ஆணையத் தின் கூட்டத் தொடரில் மிகத் தெளிவாகக் கூறியிருக்க,  தமி ழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பாராளுமன்றத்தில் உரையாற் றுகையில்; கலப்பு நீதிமன் றத்தை  நிராகரித்தால்,  சர்வ தேச குற்றவியல் நீதிமன்றுக்கு  குறித்த விடயத்தைக் கொண்டு போவோம் என்று கூறியுள்ளார். தனது  கூற்றுக்குச் சார்பாக இணை அனுசரணைக்கு உடன்பட்ட பின்பு அதிலிருந்து  இலங்கை அரசு விலகமுடியாது  என தனது கருத்தை அவர் வலிமைப்படுத்தியுள்ளார்.

சட்டவியல் சார்ந்து  அவர் முன் வைத்த விடயம்  ஏற்புடைய தாக இருக்கலாம். ஆனால் இலங்கை விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்குக் கொண்டு செல்லவேண்டும் என நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் கூறிய போது  உங்களால் முடி ந்தால் கொண்டு போய்ப் பாருங்கள் என்று  பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்கள் கூறியது ஏன்? என்பதுதான் எம் கேள்வி. 

முடிந்தால் இலங்கை விவகாரத்தை  சர்வதேச நீதிமன்று க்குக் கொண்டு போங்கள் பார்க்கலாம் என்று  சவால் விடு த்த எம்.ஏ. சுமந்திரன் இப்போது அதே சர்வதேச குற்றவியல் நீதிமன்றை உச்சரிக்கத் தலைப்பட் டுள்ளார். ஆக, இலங்கைத் தமிழர்களின்  தலைவிதி எப்படியிருக்கிறது என்பது இப்போது தெளிவாகிறது.

ஆம், இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதாக இருந்தாலும் அது  எங்களாலேயே ஆகவேண் டும். சர்வதேச குற்றவியல் நீதி மன்றுக்கு இலங்கை விவ காரத்தைக் கொண்டு போவது என்று கூறுவதாக இருந்தாலும்  அதை நாங்களே எங்கள்  வாயால் கூற வேண்டும் என்பதுதான்  எம் தமிழ் அரசியல் தலைமையின் நிலைப்பாடாக உள்ளது.

இலங்கை ஆட்சியாளர்களால் எம் தமிழினம் பட்ட  துன்ப துயரங்களுக்கு  நீதி கிடைக்க வேண்டும். ஈழத்திருநாட்டில் எங்கள் தமிழினம்  உரிமையோடும் சுதந்திரத்தோடும் வாழவேண் டும் என்று  இலங்கைத் தமிழ ரசுக் கட்சி நினைக்குமாக இரு ந்தால், இலங்கை விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்று க்கு  எடுத்துச் செல்லவேண்டு மென்று  நீதியரசர் விக்னேஸ் வரன் அவர்களும் கஜேந்திரகு மார் பொன்னம்பலம் அவர்க ளும்  கூறியபோது, ஆம் அதைத்தான் நாம் செய்ய வேண்டும்.  இதற்காக ஒற்றுமைப்பட்டு வியூகம் அமைப்போம் வாருங்கள் என்ற  அழைப்பை தமிழரசுக் கட்சி விடுத்திருக்க வேண்டும். 

ஆனால் அது எதுவும் நடக்கவில்லை எனும் போது இவர்களால் தமிழர்களுக்கு விமோசனம் கிடைக்குமென்று  யார்  நம்பினாலும்  அதைவிடக்  கொடுமை வேறு எதுவுமாக இருக்க முடியாது.
என்ன செய்வது, அழுவார் அழுவார் எல்லாம் தம் கவலை  திருவன் பெண்டிலுக்காக அழ யாருமில்லை என்ற தமிழ்ப் பழமொழி தான் எம் நினைவுக்கு வருகிறது.

தமிழ் அரசியல் தலைமையில் இருக்கின்றவர்களுக்கு அடுத்த முறையும்  பாராளுமன்ற உறுப்பினர் பதவி கிடைக்க வேண்டும். மாகாண சபையில் உறுப்பினர்களாக இருந்தவர்களுக்கு பாராளுமன்றக் கதிரைகளிலும் இருக்கவேண்டும் என்ற ஆசை. கொடி பிடித்து, குடைபிடித்துச் சொன்னதை அப்படியே  செய்யும் கட்சி உறுப்பினர்களுக்கு  மாகாண சபையில் ஓர் உறுப்பினராகி விடவேண்டும் என்ற ஏக்கம். இவை  நீதியை, நியாயத்தை, தர்மத்தை  மறைத்து விடுகின்றன. மற்றவர்கள் விடுகின்ற கண்ணீரில் எங்களுக்கான வாக்குகள் தெரிகின்றபோது எப்படி தமிழினம் உய்ய முடியும். 

எம் தமிழினத்தின் உலகப் பெருமைக்குக் காரணமாக இருக்கின்ற மதிப்பார்ந்த கம்பவாரிதி அவர்களே! இந்த நாட்டு  ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன அடிப்படையில் ஒரு நல்ல மனிதர். இதை நாம் கூறி நீங்கள் தெரிய வேண்டும் என்ற அவசியம் எதுவும் கிடையாது. 2017இல் கொழும்பில் நடந்த  கம்பன் விழாவில்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாகக்  கலந்து கொண்டிருந்தார். அங்கு அவர் ஆற்றிய உரைக்குப் பின்னர் உங்கள் உரை இடம்பெற்றது. 
என் அதிகாரத்தைக் குறைப்புச் செய்ய உங்களின் அனுமதியை வேண்டுகின்றேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் ஆற்றிய உரையை மீள ஞாபகப்படுத்திய தாங்கள், அதனூடு ஜனாதிபதி மைத்திரியைப் பாராட்டியிருந்தீர்கள்.

✿ ✿ ✿ ✿ ✿ ✿

புருசோத்தமன் எழுதும் கம்பவாரிதிக்கு ஓர் அன்பு மடல் (பாகம் 5)

நிறைவேற்று அதிகாரம் கொண்ட  ஜனாதிபதி ஆட்சியில் தனக்கிருக்கக்கூடிய அதிகாரத்தைக் குறைப்புச் செய்வதற்காக பாராளுமன்ற உறுப்பினர்களிடம்  அனுமதி கேட்டவர்  ஜனாதிபதி மைத்திரி. தவிர, புங்குடுதீவு மாணவி வித்தியா  கொல்லப்பட்ட போது உடனடியாக யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து, அந்த மாணவியின் பெற்றோரைச் சந்தித்து  ஆறுதல் கூறியவர். யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரிக்குச் சென்று  அந்த மாணவிகளைச் சந்தித்து  பயம் கொள்ளாதீர்கள் என்று தைரியம் கொடுத்தவர்.  வலிகாமம் வடக்கிற்குச் சென்ற ஜனாதிபதி மைத்திரி அங்குள்ள நலன்புரி முகாம்களுக்கு நேரில் சென்று, குடிசை வீட்டுக் குந்தில் குந்தியிருந்து  குசினியில் ஆக்கப்பட்ட  சமையலைப் பார்த்துவிட்டு வலி.வடக்கில் குடியமர்த்தக்கூடாது என்று  தென்பகுதியில் இருந்து கொக்கரிப்பவர்கள் ஒருக்கால் வலி. வடக்கு மக்களின் அவலத்தை  இங்கு வந்து பார்க்கவேண்டும் என அறைகூவல் விடுத்தார். அதுமட்டுமல்ல 
யாழ்ப்பாணத்திற்கு அவர் வரும் போதெல்லாம்  எந்தவித பாதுகாப்பு படோபகாரங்களும் இல்லாமலே வந்து போனார். ஆனால் ஜனாதிபதி வடக்கிற்கு வந்த எந்தச் சந்தர்ப்பத்திலும்  தமிழரசுக் கட்சியின் தலைமைகள் அவருடன் வரவும் இல்லை, அவரைச் சந்திக்கவும் இல்லை. பாதுகாப்பு பந்தோபஸ்து இல்லாமல்  மிக எளிமையாக  ஜனாதிபதி மைத்திரி வடபகுதிக்கு வருவதைச் சாதகமாக்கி அவரைக் கொல்வதற்கான சதி முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதான தகவல்களை புலனாய்வுத்துறை வெளியிட்டபோது  ஜனாதிபதியின் வடக்கிற்கான விஜயங்களும் கணிசமாகக் குறைக்கப்பட்டன.

பாதிக்கப்பட்ட மக்களையும் சம்பந்தப்பட்ட இடங்களையும் நேரில் சென்று நிலைமையை அவதானித்து, படிப்படியாக காணி விடுவிப்புக்களையும்  மீள்குடியமர்வுகளையும் செய்து வந்த ஜனாதிபதி மைத்திரியின் பால் தமிழ்மக்கள் ஈர்க்கப்பட்டு  விடுவர் என்பதனாலும் ஐக்கிய தேசியக் கட்சி மீதான விசுவாசத்தின் காரணமாகவும்  ஜனாதிபதி மைத்திரியின் உறவைத் தமிழரசுக் கட்சியின் தலைமை வெட்டிவிட்டது. ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்­வைத் தோற்கடிக்க வேண்டும். எனவே அவரை எதிர்த்து  நிற்கின்ற மைத்திரி பால சிறிசேனவை நாங்கள் ஆதரிக்கவேண்டும் என்று  கூறிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தரின் வழி  தமிழ் மக்கள் ஜனாதிபதி மைத்திரியைத் தேர்தலில் ஆதரித்தார்கள். அது மைத்திரியை ஜனாதிபதியாக்கியது.
இருந்தும்  இரா.சம்பந்தர்  தனது அரசியல் சாணக்கியத்தை அமுல்படுத்த முடியாதவராக- ஜனாதிபதி மைத்திரியுடன் நெருங்கிய ஒற்றுமையை ஏற்படுத்த முடியாதவராக ஆக்கப்பட்டார். 
இதை ஆக்கியவர்கள்  தமிழரசுக் கட்சியில் முக்கிய இட த்தில் இருக்கக்கூடிய  பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு  வேண்டியவர்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.

என்ன செய்வது, தமிழ் இனத்திற்கு தன் அரசியல் காலத்தில்  தீர்வைப் பெற்றுக் கொடுக்கவேண்டும் என்ற நினைப்பை இரா. சம்பந்தர் ஐயா கொண்டிருந்தாலும்  அவரின் முதுமையும் பக்க பலத்தின் தேவையும்  காரணமாக மற்றவர்களின் ஆலோசனை களை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டியவராக  மாறினார். இதனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான உறவுகள் முற்றுமுழுதாக முடிவுறுத்தப்பட்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடனான உறவு வலுப்படுத்தப்பட்டது. பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவுடன் ஒன்றித்த தமிழரசுக் கட்சி இரா. சம்பந்தர் ஐயாவின் கேள்விக் கணைகளைத் தடுக்கும் பொருட்டு அவருக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி பெற்றுக் கொடுக்கப்பட்டது.  அவ்வளவு தான் அந்தப் பதவி  சம்பந்தர் ஐயாவின் வாயை அடைத்தது.

அங்கு ஞானசம்பந்தக் குழந்தை திருவாய் மலர்ந்தழுததால் வேதநெறி தழைத்தோங்கியது. இங்கு சம்பந்தர் ஐயா வாய் மூடி  மௌனியாக இருந்ததால் தமிழினத்திற்குச் சாதகமாக இருந்த அத்தனை சூழ்நிலைகளும்  தவிடுபொடியாக்கப்பட்டன. இந்த நிலைமைகள் ஜனாதிபதி மைத்திரியையும்  தமிழ் மக்களையும்  பிரித்தாண்டது. உண்மையில் ஜனாதிபதி மைத்திரியின் கரத்தைப் பலப்படுத்தி அவர் மூலமாக சில வேலைத் திட்டங்களை  நாம் செய்து முடித்திருக்கவேண்டும். ஆனால்  அது திட்டமிட்டு கைவிடப்பட்டது.

✿ ✿ ✿ ✿ ✿ ✿

புருசோத்தமன் எழுதும் கம்பவாரிதிக்கு ஓர் அன்பு மடல் (பாகம் 6)

மிழ் மக்களோடு நல்லதொரு புரிந்துணர்வைக் கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன மாவீரர் தின நிகழ்வுகளை அனுஷ்டிப்பது தொடர்பிலோ முள்ளிவாய்க் கால் நினைவேந்தலின் போதோ எந்தவிதத் தடைகளையும்  ஏற்படுத்தாமல் அது தமிழ் மக்களின் உரிமை என்பதாக நடந்து கொண்டார்.

முன்னைய ஆட்சிகளில் மாவீரர் தினம் ஆரம்பமாகிறது என்றாலே யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு முன்பாக  கவசவாகனங்கள்  நிறுத்தப்படும். வீதியயங்கும்  சீருடையினர். சோதனை நடவடிக்கைகள் தீவிரமாகும். இந்த நெட்டூரத்தை இல்லாமல் செய்து நினைவு கூரலைத் தடுக்கக்கூடாது என்பதாக புதிய கலாசாரத்தை அமுலாக்கியவர் ஜனாதிபதி மைத்திரி.

இதை நாம் கூறும்போது  ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேனவைப் புகழ்ந்து புராணம் பாடுவதாகத் தயவுசெய்து யாரும் நினைத்துவிடாதீர்கள். மாறாக, ஜனாதிபதி மைத்திரி அடிப்படையில் ஒரு நல்ல மனிதர். ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களால் ஆதரிக்கப்பட்ட ஒருவர். தமிழ் மக்கள் வாக்களித்ததனால்  ஜனாதிபதிப் பதவியைப் பெற்றவர் என்பதான சாதக நிலைமைகள் இருந்த போதிலும்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உறவை, அவரின் ஆதரவை தமிழரசுக் கட்சி வெட்டிவிட்டது எனும் போது அதற்குள் இருக்கக்கூடிய சூக் குமங்கள் எத்தகையவை என்பதை நாம் கூறாமலே நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைப் பொறுத்தவரை அவர் ஊழலுக்கு உடன்படாதவர். தனிப்பட்ட முறையில் செல்வாக்குச் செலுத்துவதை விரும்பாதவர். பணம் கொடுத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களை வாங்காதவர். அப்படிப்பட்டவர் தமக்கு பிரயோசனப்பட மாட்டார் என்பதைத் தவிர வேறு எதையும்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின்  உறவைத் துண்டித்ததற்கான காரணமாகத் தமிழரசுக் கட்சியால் முன்வைக்க முடியாது. 

எங்களோடு இணங்கிக் கொள்ளக்கூடிய அத்தனை பேரையும் அணைத்துச்சென்று எங்கள் இலக்கை அடைவது தான் எங்களின் அரசியல் வியூகமாக இருக்கவேண்டும். ஆனால் தமிழ் மக்களின்  வாழ்வு என்பதைவிட, கிடைத்த பதவியை  எங்கள் சுயநலனுக்காகப் பயன்படுத்திக் கொள்வோம் என்ற நினைப்பு  வந்துவிட்டால்  தமிழினம் என்பது அடிபட்டுப் போய்விடும்.
இது விடயத்தில் இலங்கை முஸ்லிம்  மக்கள் அரசியல் சூழ் நிலையை தமக்கு மிகவும் சாத கமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர் என்பதை இங்கு கூறித்தானாக  வேண்டும். 

இவை ஒருபுறமிருக்க, நேர்மையான அரச தலைவரின் உறவுகளை  அடியோடு கைவிட்ட தமிழரசுக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சியின் அங்கத்துவக் கட்சி போல நடந்து கொண்டது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்கள் மிக நெருக்கமான உறவைப் பேணிக் கொண்டனர். கூடவே முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் அவர்களை இயங்கவிடாமல் தடுக்கின்ற அநியாயத்தைச் செய்வதற்கு பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவின் உதவியை  நாட, அவர் வடக்கின் முதலமைச்சர்  சி.வி. விக்னேஸ்வரனுடன் நான் கதைக்கமாட்டேன்.  முன்பும் ஒருபோதும் கதைக்கவில்லை. இனியும் கதைக்கமாட்டேன் என்று தந்தித் தொலைக்காட்சிக்கு செவ்வியளித்தார். இவ்வாறு பிரதமர் ரணில் கூறியபோது அதிர்ச்சியடைந்த  தந்தித் தொலைக்காட்சியின் ஊடகவியலாளர், வடபகுதி யின் முதலமைச்சரோடு கதைக்காமல் எப்படி  நீங்கள் வடக்கின் அபிவிருத்தியை மேற்கொள்ள முடியும் என்று  கேட்டார். அதற்கு பிரதமர் ரணில்; வடக்கின் முதலமைச்சர் விக்னேஸ்வரனுடன் கதைக்க வேண்டிய தேவை எனக்கில்லை. நான் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கதைப்பேன். அவர்களூடாக அபிவிருத்தியைச் செய்வேன் என்றார். 

ஒரு நாட்டின் பிரதமர் இவ்வாறு ஏன் சொல்ல வேண்டும் என்பதை நூலோர் தொகுத்த அறங்களையயல்லாம் கற்றுணர்ந்த தாங்கள் அறியாமல் இருக்கமாட்டீர்கள். ஆக, முதலமைச்சர் விக்னேஸ்வரனுடன் நான் கதைக்க மாட் டேன் என்ற  வார்த்தையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒருபோதும் கூற மாட்டார் என்பதை நீங்கள் நிச்சயம் ஏற்றுக் கொள்வீர்கள். 
இங்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைக் கூட நாம் குறைகண்டுவிட முடியாது. மாறாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்களுக்கு  இட்டல் இடைஞ்சல் செய்ய வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக செய்விக்கப்பட்டவை தான் அவை.

நாம் இங்கு கூறவருவதெல்லாம் பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவுடன் தமிழரசுக் கட்சி கொண்டிருந்த உறவை, நட்பை, ஆதரவை ஜனாதிபதி மைத்திரியுடனும் சமநேரத்தில் ஏற்படுத்தியிருந்தால், இன்று சமாந்தரமான ஒரு நல்ல உறவும்  புரிந்துணர்வும்  ஏற்பட்டிருக்கும். இதன் மூலமாக எங்கள் இலக்கை நாம் வென்றிருக்கலாம். மாறாக பிரதமர் ரணிலுடன் சேர்ந்து  கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தமிழரசுக் கட்சி  ஓரங்கட்டிய தன் விளைவாக ஜனாதிபதி மைத்திரி தமிழரசுக்கட்சியை வெறுக்கத் தலைப்பட்டார்.

✿ ✿ ✿ ✿ ✿ ✿

புருசோத்தமன் எழுதும் கம்பவாரிதிக்கு ஓர் அன்பு மடல் (பாகம் 7)

மதிப்புக்குரிய  கம்பவாரிதி அவர்களே!நேற்றைய தினம் தங்களுக்கு எழுதிய ஆறாவது கடிதத் தொடரில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன்  உறவைப் பேணாத தமிழரசுக் கட்சி, தனித்து  பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் மட்டும் இணைந்து ஜனாதிபதியின் ஆத்திரத்தைச் சம்பாதித்தது என்ற தகவலைத் தங்களுக்குத்  தெரியப்படுத்தியிருந்தோம்.

இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதாக இருந்தால் தேசிய அரசு அமையவேண்டும் என்ற கருத்து பல வருடங்களாகப் பேசப்பட்டன. எனினும் தேசிய அரசு அமைவதற்கான சூழ்நிலை அப்போது ஏற்படவில்லை. மாறாக  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஜனாதிபதி  பதவியிலும் ஐக்கிய தேசியக் கட்சி  பாராளு மன்ற ஆட்சியிலும் அமர்ந்த போது  தேசிய அரசு மலர்ந்தது. முன்பும் இல்லை இனியும்  நடக்கப்போவதில்லை என்று கூறுமளவிற்கு ஒரு தேசிய அரசு உருவாகியது. அந்தத் தேசிய அரசின் உருவாக்கத்தில் தமிழ் மக்களுக்குக்  கணிசமான பங்கு உண்டு என்றளவில், தேசிய அரசில் இடம்பெற்ற தரப்பு களை அனுசரித்து எங்கள் இல க்கை அடைவதுதான்  தமிழ் அரசியல் தலைமையின் தார்மீகப் பணியாக இருந்திருக்க வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை. 

தவிர, ஜனாதிபதி மைத்திரியும் பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவும் கருத்து ரீதியாக முரண்பாட்டைக் கொண்டிருந்த போது  எதிர்க்கட்சித் தலைவராக இருந்த  இரா. சம்பந்தர் தலை மையிலான தமிழரசுக் கட்சியே அந்த முரண்பாட்டு நிலை மையை சுமுகமாக்கியிருக்க வேண்டும். 
இதைச் செய்வதற்கு  ஜனாதி பதி மைத்திரியுடனும் பிரதமர் ரணிலுடனும் சமச்சீரான நல் லுறவை தமிழரசுக் கட்சி பேணியிருப்பது அவசியம். ஆனால் தமிழரசுக் கட்சி பக்கச்சார்புடன்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஓரங்கட்டி,  எங்களுக்குப் பிரதமர் ரணில் இருந்தால் போதும். நாங்கள் எங்கள் பிரச்சினை யைத் தீர்த்துக்கொள்வோம்  என் பது போன்ற திமிர்த்தனத்தைக் காட்டியது. இதன் முடிவு தமிழரசுக் கட்சி மீது ஜனாதிபதி மைத்திரிக்குக் கடும் கோபம் ஏற்பட்டது. 

தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணவேண்டும் என்று  நினைக்கின்ற என்னை- முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்­வை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்டு  வெற்றி பெற்ற என்னை  ஆதரிக்க வேண்டிய தமிழ ரசுக் கட்சி  என்னை ஓரங்கட்டி விட்டு பிரதமர் ரணிலுடன் சேர்ந்து கொண்டு என்னை எதிர்ப் பதுடன்  ஐக்கிய தேசியக் கட்சிக்கு முண்டு  கொடுக்கிறது என ஜனாதிபதி மைத்திரி நினைத்தார்.

இதேநேரம் மத்திய வங்கியில் இடம்பெற்றதான பிணைமுறி  மோசடி விவகாரமும் ஜனாதிபதியைக் கொல்வதற்கான சதி முயற்சி நடந்தது என்ற  புலனாய்வுத்  துறையின் அறிவிப்பும்  ஜனாதிபதி மைத்திரிக்கு பிரதமர் ரணில் மீது பயங்கரக் கோபத்தை ஏற்படுத்தியது.

அதுமட்டுமன்றி அமைச்சரவை யில் ஐக்கிய தேசியக் கட்சி சார்ந்த அமைச்சர்கள் ஜனாதிபதியை  மதிக்கத் தவறியமையும் அமைச்சரவையை ஏளனப்படுத்திய செயலும்  போதாக்குறைக்கு  ஜனாதிபதியைக் கொல்வதற்கான முயற்சி பிசுபிசுத்துப் போக, வழிப்போக்கர் ஒருவர் மீது பழியைச் சுமத்தி  அந்தப் பழி இந்தியப் புலனாய்வுத் துறை மீது சுமத்தப்பட இந்தியப் பிரதமர்  நரேந்திரமோடி அரசுகடும் கோபம் கொள்ள, சூட்டோடு சூடாக இந்தியப்புலனாய்வுக்கும் ஜனாதிபதி மைத்திரியைக் கொல்வதற்கான சதித்திட்டத்திற்கும்  எந்தத் தொடர்பும் இல்லையயன  ஜனாதிபதி செயலகம் மறுப்பு விடுகின்ற அளவில்  நிலைமை படுமோசமாகியது.

இத்தகையதோர் சூழ்நிலை யில் அரசியலமைப்பை நிறை வேற்றுவதுதான்  தங்கள்  முதற் பணி  என்று கூறிக்கொண்ட இரா. சம்பந்தரும் அவரின்  சகாக்களும் ஜனாதிபதி மைத் திரியையும் பிரதமர் ரணிலை யும் ஒற்றுமைப்படுத்தி  தமிழ் மக்கள் உங்களை ஆதரித்ததை மறந்துவிடாதீர்கள், இனப் பிரச்சினைக்கான தீர்வை அமுலாக்குங்கள், தமிழ் அரசி யல் கைதிகளை விடுதலை செய் யுங்கள், காணாமல் போன வர்களின் பிரச்சினைக்குத் தீர்வு தாருங்கள் என்று தான் கேட்டிருக்க வேண்டும். ஆனால் அவை எதுவும் நடை பெறாமல் பிரதமர் ரணிலுடன்  நின்று கொண்டு  தமிழரசுக் கட்சியும் ஜனாதிபதி மைத்திரியை ஏளனப்படுத்தியது.

சாதுமிரண்டால் காடு கொள்ளாதென்பது போல் ஜனாதிபதி மைத்திரி கடும் கோபவயப்பட்டு யாருமே எதிர்பார்க்காத  அதிரடி முடிவுகளை எடுத்தார்.

அந்த முடிவுகளை எடுக்க முன்னதாக் கரு ஜெயசூரிய,  சஜித் பிறேமதாஸ ஆகியோரை அழைத்து  பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ளுங்கள்  என்று  கேட்டார் எனில் மகிந்த  ராஜ பக்­வைப் பிரதமராக நியமிக்கின்ற எண்ணம்   ஜனாதிபதியி டம் இருக்கவில்லை என்பது உறுதியாகிறது.

✿ ✿ ✿ ✿ ✿ ✿

புருசோத்தமன் எழுதும் கம்பவாரிதிக்கு ஓர் அன்பு மடல் (பாகம் 8)

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்­வை எதிர்த்து ஜனாதிபதித் தேர்தலில் போட் டியிட்ட மைத்திரிபால சிறி சேன மிகுந்த துணிச்சல் உடையவர் என்பது மறுக்கமுடியாத உண்மை. ஜனாதிபதித் தேர்தலில் என்னோடு போட்டியிட இருக்கின்ற அந்த வீரன் யார் என்பதை அறிய நான் விரும்புகின்றேன் என்று மகிந்த ராஜபக்சவை அவர் அருகில் நின்ற வீரர் தான் ஜனாதிபதி மைத்திரி. ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்தால் என் உயிர் பறிக்கப்பட்டு நிலத்தில் புதைக்கப்பட்டிருப்பேன் என்று கூறியவர் ஜனாதிபதி மைத்திரி.

அப்படிப்பட்ட ஒருவர் மகிந்த ராஜபக்­சவை பிரதமராக நியமிக்கிறார் என்றால் தற்கு
மூலகாரணம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசால் அவர்பட்ட துன்பமும் ஆபத்தும் என்பதை நாம் எளிதாக மறுத்துவிட முடியாது. இதற்கு மேலாக, தமிழரசுக் கட்சியை தன்னோடு வைத்துக் கொண்டு அவர்களின் ஆதரவு தமக்கு இருக்கின்ற துணிவில் ரணில் விக்கிரமசிங்க அரசு தன்னை அவமானப்படுத்தவும் தனக்கு ஆபத்தை ஏற்படுத்தவும் தயாராகிவிட்டபோது இனியும் தான் பேசாமல் இருக்கக்கூடாது என்று ஜனாதிபதி மைத்திரி முடிவெடுத்தார். அந்த முடிவுதான் மகிந்தவை பிரதமராக்குகின்ற அவரின் அறிவிப்பு. மகிந்த ராஜ பக்சவைப் பிரதமராக்குகின்ற செயலை தமிழ்மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்பது உறுதி.

ஆனாலும் மகிந்தவை எதிர்த்து நின்ற ஒருவர், ஊழல்வாதிகள் என்றும் என் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடியவர்கள் என்றும் சொன்ன ஜனாதிபதி மைத்திரி அவற்றையெல்லாம் மறந்து மகிந்தவைப் பிரதமராக்க நினைத்தார் எனில், இவரைவிட அவர் பரவாயில்லை என்ற கட்டத்தில் மட்டுமே அந்தச் செயல் சாத்தியமாக முடியும் என்பதை எவரும் ஏற்றுக் கொள்வர்.
இது தவிர மகிந்தவைப் பிரதமராக்கிய ஜனாதிபதியின் செயல் அரங்கேறுவதில் அவலப்பட்ட போது பாராளுமன்றத்தைக் கலைக்கின்ற அறிவிப்பை ஜனாதிபதி விடுக்கின்றார். இங்குதான் தமிழரசுக் கட்சி நீதிமன்ற வாசல் ஏறுகிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தைக் கலைப்புச் செய்தமை அரசியலமைப்புக்கு முரணான செயல் என்ற அடிப்படையில் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஜனாதிபதி சட்டத்தரணி கனக நாயகம் கனகரூடவ்ஸ்வரன் ஆகி யோர் கொண்ட சட்ட வல்லுநர் குழு உயர்நீதிமன்றத்தை நாடி வாதம் புரிந்தது. வாதப் பிரதிவாதங்களை ஆராய்ந்த உயர்நீதிமன்றம் பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை அரசியலமைப்புக்கு முரணானதெனக் கூறி, பாராளுமன்றக் கலைப்புச் செல்லுபடியற்றது எனத் தீர்ப்பு வழங்கியது. தமிழ்ச் சட்ட வல்லுநர்களின் சாதனை எனப் புகழாரம் சூட்டப்பட்டது இவ்விடத்தில் தான். தாங்கள் (கம்பவாரிதி) பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தமிழ் மக்களின் தலைமைக்குரியவர் என்று கூறியிருந்தீர்கள். இராமபிரான் வாலியை மறைந்திருந்து தாக்கிய அவசரத் தன்மை தங்களிடமும் இருந்ததை அவதானிக்க முடிந்தது. இதை நாம் கூறுவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனை நாங்கள் எதிர்க்கின்றோம் என்று யாரும் நினைத்து விடக்கூடாது. எம்.ஏ. சுமந்திரனின் சட்டவல்லமையை நாம் எந்த இடத்திலும் குறைத்து மதிப்பிடவில்லை.

சட்டத்துறையில் வல்லுநர் என்று போற்றக்கூடிய எம்.ஏ. சுமந்திரன், கனகநாயகம் கனக ஈஸ்வரன் போன்ற இன்னும் பல தமிழ்ச் சட்டவல்லுநர்கள் நம் இனத்தைப் பெருமைப் படுத்துவார்கள். இதில் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது. மாறாக நம் கேள்வியெல்லாம் உயர்நீதிமன்றில் ஏன் பாராளுமன்றக் கலைப்பை இரத்துச் செய்ததனால் தமிழ் இனத்திற்கு ஏற்படக்கூடிய நன்மை என்ன? என்பதுதான். தமிழரசுக் கட்சியைப் பொறுத்தவரை பாராளுமன்றத்தைக் கலைத்து பொதுத்தேர்தலை நடத்தினால் இது தமக்குப் பாதகமாக அமையும் என்ற நினைப்பு தமிழரசுக் கட்சியிடம் இருந்தது.

தவிர, பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஓய்வூதியத்தைப் பெறுவதாக இருந்தால் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் ஆகக் குறைந்தது நான்கு வருடங்களாவது பூர்த்தி செய்திருக்கவேண்டும். அவ்வாறு நான்கு வருடங்கள் பூர்த்தி செய்யப்படாத நிலையில் புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்காமல் அப்படி யாரேனும் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தால் அவர்களுக்கு நன்மை. மற்றும்படி மிழ் மக்களுக்கான நன்மை என்ன என்று கேட்டால் எதுவுமில்லை என்பதே பதில். நாட்டின் அரசியலமைப்பைப் பாதுகாத்திருக்கின்றோம் என்றால் அது அர்த்தமற்றதும் பொருத்தமற்றதுமான பதிலாக இருக்கும்.

✿ ✿ ✿ ✿ ✿ ✿

புருசோத்தமன் எழுதும் கம்பவாரிதிக்கு ஓர் அன்பு மடல் (பாகம் 9)

அன்புக்குரிய கம்பவாரிதி அவர்களே!
மகிந்த ராஜபக்சவைப் பிரதமராக நியமித்த ஜனாதிபதி மைத்திரி தனது நியமனத்திற்கு பாராளுமன்றத்தில் அங்கீகாரம் கிடைக்காதெனும் போது பாராளுமன்றத்தைக் கலைப்புச் செய்தார். 
இவ்வாறு பாராளுமன்றத்தைக் கலைப்புச் செய்தது பாராளுமன்றத்தில் கோபம் கொண்டல்ல. மாறாக பொதுத் தேர்தலை நடத்தினால், அதில் மகிந்த ராஜபக்ச­ தரப்பு நிச்சயம் வெற்றிபெறும். எனவே தான் நியமித்தது போல மகிந்த ராஜபக்ச­ பிரதமராகி விடுவார் என்பதுதான்.
எனினும் பாராளுமன்றக் கலைப்பை இரத்துச் செய்வித்தமை தமக்குப் பெருமை என தமிழரசுக் கட்சித் தலைமை நினைக்கிறது. உண்மையில் தமிழினத்திற்குச் சாதகமாகவும் பெருமையாகவும் இருந்திருக்கக்கூடியது ஜனாதிபதி மைத்திரியையும் பிரதமர் ரணிலையும் ஒற்றுமையாக வழி நடத்திச் செல்வதாகும். ஜனாதிபதியும் பிரதமரையும் ஒற்றுமைப்படுத்தி அதன் மூலம் அரசியலமைப்பை நிறைவேற்றுவதே தமிழரசுக் கட்சியின் இலக்காக இருந்திருக்கவேண்டும்.
ஆனால் ஜனாதிபதி மைத்திரியை ஓரங்கட்டி, பிரதமர் ரணிலுடன் உறவைப் பேணிக் கொண்ட தமிழரசுக் கட்சி இரு தலைவர்களையும் ஒற்றுமைப்படுத்தக்கூடிய தகுதியை இழந்திருந்தது என்பதே உண்மை.

மதிப்புக்குரிய கம்பவாரிதி அவர்களே!  2018ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் பாராளுமன்றக் கலைப்பை இரத்துச் செய்ய வைத்தோம் என்றும் அதன்மூலம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசு இயங்க உதவினோம் என்றும் நாம் மார்தட்டலாம். ஆனால் இது ஒரு தற்காலிகமான வெற்றி என்பதே யதார்த்தம். ஆகக்கூடியது இன்னும் இரண்டு வருடங்களில் பொதுத் தேர்தல் நடக்கப் போகின்றது. அந்தப் பொதுத்தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவின் கட்சி மீண்டும் வெற்றி பெறும் என்றால், பாராளுமன்றக் கலைப்பை இரத்துச் செய்தமை அர்த்தமுடையதாகும். மாறாக அடுத்த பொதுத் தேர்தலில் மகிந்த ராஜபக்ச தரப்பு வெற்றி பெற்றால், நிலைமை என்னவாகும் என்பதை ஒரு கணமேனும் சிந்தித்துப் பார்ப்பது அரசியல் வியூகத்திற்கு மிகவும் அவசியமானது.

ஆக, பிரதமர் ரணிலுடன் மட்டும் சேர்ந்து அவருடன் மட்டும் நிற்காமல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனும் அதேமாதிரியாக உறவு நிலையைப் பேணியிருந்தால் பாராளுமன்றக் கலைப்பு என்ற இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டிருக்காதென்பதுடன் அடுத்த தேர்தலிலும் ஜனாதிபதி
மைத்திரி, பிரதமர் ரணில் என்ற தேசிய அரசு அமோக வெற்றி பெற்றிருக்கும். இந்த வெற்றி முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தரப்புக்கான அரசியல் எதிர்காலத்தைச் 
சூனியமாக்கியிருக்கும். என்ன செய்வது, தங்கள் சொந்த நலனுக்கே முன்னுரிமை என்று தமிழரசுக் கட்சி நினைத்தபோது பிரதமர் ரணிலுடன் மட்டும் உறவைப் பேணுவது என்ற நிலைமைக்குத் தமிழரசுக் கட்சி ஆளாகியது என்பதுதான் நிறுதிட்டமான உண்மை. 
ஆக,அடுத்த பொதுத் தேர்தலில் மகிந்த ராஜபக்ச தரப்பு வெற்றி பெற்றால் தமிழ் மக்களின் எதிர்காலம் எப்படியாக இருக்கும் என்பது பற்றியெல்லாம் சிந்திக்காமல் ஜனாதிபதி மைத்திரியை ஓரங்கட்டி ரணிலுடன் உறவைப் பேணுகின்ற தமிழரசுக் கட்சியின் அரசியல் இராஜதந்திரம் தமிழ் மக்களுக்கு மிகப் பாதகமான நிலைமையை ஏற்படுத்தப் போகிறது என்பதே உண்மை.

அன்புக்குரிய கம்பவாரிதி அவர்களே! தமிழ்மக்கள் நிதானமாகச் சிந்திக்க வேண்டிய கட்டத்தில் உள்ளனர். இக்கடிதத்தைத் தங்களுக்கு எழுதிக் கொண்டிருக்கும் போதே தமிழரசுக்கட்சி ஜனாதிபதியுடனும் பிரதமருடனும் எப்படி நடந்து கொண்டது என்பதை நீங்கள் நிச்சயம் 
அவதானித்திருப்பீர்கள். வடக்குக் கிழக்கிற்கான ஜனாதிபதி அபிவிருத்தி செயலணிக் கூட்டம் நடைபெற்ற போது ஜனாதிபதி மைத்திரியுடன் கடும் கோபவயப்பட்டு தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் வாதிட்டனர். நல்லது இராணுவம் கையகப்படுத்தியுள்ள நிலப்பரப்புத் தொடர்பில் தவறான தகவல்களைப் படையினர் கூறிய போது அவற்றை பகிரங்க மாகச் சுட்டிக்காட்டுவது வரவேற்கத்தக்கது. இருந்தும் ஜனாதிபதியுடன் முரண்பட்ட அதே தமிழரசுக்கட்சி கலப்பு நீதிமன்றத்தை ஏற்கமுடியாது என்று கூறிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசு முன்வைத்த வரவு-செலவுத் திட்டத்தை ஆதரித்து வாக்களிக்கிறது எனும் போது அதன் உள்ளார்ந்தம் என்ன என்பதை நாம் கூறி நீங்கள் யாரும் தெரிந்து கொள்ள வேண்டிய தேவை இராது.
ஆம், ஐ.நா. மனிதவுரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 
அரசின் வெளி விவகார அமைச்சாரக இருக்கின்ற திலக் மாரப்பன கலப்பு நீதிமன்றை 
ஏற்கமாட்டோம் என்று கூறியிருந்தார். அதேநேரம் கலப்பு நீதிமன்றத்தை நிராகரித்த அரசை தமிழரசுக்கட்சி ஆதரிப்பதுடன் பாதீட்டிற்கு ஆதரவாக வாக்களிக்கிறது எனில், தமிழரசுக் கட்சியின் அரசியல் யாருக்கானதென்பதை இப்போதேனும் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என நம்புகிறோம்.

✿ ✿ ✿ ✿ ✿ ✿

புருசோத்தமன் எழுதும் கம்பவாரிதிக்கு ஓர் அன்பு மடல் (பாகம் 10)

அன்புக்குரிய கம்பவாரிதி அவர்களுக்கு வணக்கம். 
பொதுவில் ஒரு மகோற்சவம் என்றால், அது குறைந்தது பத்து நாள் திருவிழாவைக் கொண்டிருக்கும். நித்திய பூசையில் ஏற்பட்ட குறை குற்றங்களை நிவர்த் திக்கும் வகையில் மகோற்சவம் இடம்பெறுவது வழமை. அந்தவகையில் நாமும் தங்களுக்கு எழுதிய கடிதங்களின் தொடர் பத்து என்ற எண்ணிக்கைக்கு வந்துவிட்டது. தங்களுக்கான கடிதத்தின் பத்துத் தொடர்களும் தமிழ் மக்கள் மத்தியில் இருக்கக் கூடிய அரசியல் குறைபாடுகளையும் குற்றங்களையும் களைவதற்கானது. ஆலயத்தின் நித்திய பூசையில் ஏற்படுகின்ற குற்றங்களை நிவர்த்திப்பதற்காக பத்து நாள் மகோற்சவம் செய்யப்படுவது போல, எங்கள் அரசியலில் உள்ள பெருங் குறைகளையும் குற்றங்களையும் நிவர்த்திக்கவேண்டி பத்துத் தொடர்கள் கொண்ட இக்கடிதத்தை தங்களுக்கு எழுதியுள்ளோம். இக்கடிதத்தை எழுதுகின்ற நோக்கம் எம் இனம் சார்ந்தது என்பதை ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம். அதனை மீளவும் வலியுறுத்த விரும்புகின்றோம். எதுவாயினும் நித்திய பூசையில் நிகழ்ந்த குறை குற்றங்களை நிவர்த்திப்பதற்காக மகோற்சவம் ஏற்படுத்தப்பட்டாலும் அதனைச் செய்கின்ற மிகப்பெரும் பொறுப்பு மகோற்சவத்தின் பிரதம குருவைச் சார்ந்ததாகும். பிரதமகுரு பிழைவிட்டால் மகோற்சவம் அர்த்தமற்றதாகிவிடும்.

ஆகவே, ஒரு ஆலயத்தின் மகோற்சவத்தில் பிரதம குரு எந்தளவுக்கு முதன்மையும் முக்கியமும் பெறுகின்றாரோ அது போலத்தான் அரசியலில் ஏற்பட்டுள்ள மிக மோசமான 
குற்றங்கள், குறைகள், ஊழல்கள் என்பன நிவர்த்திக்கப்பட வேண்டுமாயின் அதற்குச் சரியான, நேர்மையான, பக்கச்சார்பற்ற, சுயநலன் கருதாத, ஆத்மபலம் கொண்ட ஒருவரை தலைமைக் குருவாக நியமித்தால் மட்டுமே எங்கள் அரசியலில் இருக்கக்கூடிய துஷ்ட நிக்கிரகத்தை 
பரிபாலனம் செய்ய முடியும். அந்தவகையில் ஒட்டு மொத்தத் தமிழ் மக்களினதும் நம்பிக்கைக்குரிய தலைவராக விளங்குகின்ற நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் அவர்களின் தலைமையில் தமிழ்ப்பற்று மிக்க, தமிழர்களுக்காக நேர்மையுடன் பணியாற்றி வருகின்ற தமிழ் அரசியல் வாதிகளை ஒற்றுமைப்படுத்தி ஓரணியில், எம் தமிழினத்தின் உரிமைக்காக புதிய பாதையில் பயணிக்கவேண்டியது மிக மிக அவசியமானதாகும். 

மரியாதைக்குரிய கம்பவாரிதி அவர்களே!  நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் கம்பன் கழகத்தில் சுமார் 15 ஆண்டுகள் பெருந்தலைவராக இருந்தவர். எனவே அவரின் நியாயத்துவம் தாங்கள் அறியாததல்ல. இருந்தும் தங்களுக்கும் அவருக்குமிடையில் சில கருத்து முரண்பாடுகள் இருக்கலாம். ஆயினும் அந்தக் கருத்து முரண்பாடு விற்பிடித்து நீர் கிழிய எய்த வடுப்போல ஒரு கணப்பொழுதில் தீர்ந்து போக வேண்டியது. தவிர, தனிப்பட்ட கருத்து முரண்பாடுகளுக்கு முன்னுரிமை கொடுக்கக்கூடிய கால சூழ்நிலையில்  நம் இனம் இப்போது இல்லை என்பதனால் எம் இனம் சார்ந்து சிந்திப்பது மிகமிக அவசியமானதாகும். போர்க்குற்ற விசாரணை இல்லை, காணாமல் போனவர்களைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை, தமிழ் அரசியல் கைதிகளுக்கு விடுதலை இல்லை. உங்கள் அப்பா உங்களோடு வந்துவிடுவார் நம்பிப்போங்கள் என்று ஆனந்தசுதாகரனின் சின்னம் சிறு பிள்ளைகளுக்கு ஜனாதிபதி அளித்த உத்தரவாதம் கூட இன்னமும் அமுலாகவில்லை. ஐ.நா. மனிதவுரிமைகள் பேரவை விதித்த நிபந்தனைகள் நிறைவேற்றப்படவில்லை. படையினர் அபகரித்துள்ள காணிகள் இன்னமும் விடுவிக்கப்படவில்லை என்ற நிலையில் தமிழ்மக்களுக்கு எதுவுமே நடந்தாகவில்லை.

நிலைமை இதுவாக இருந்த போதிலும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தைக் 
காப்பாற்றுவதிலேயே இலங்கைத் தமிழரசுக் கட்சி மிகத் தீவிரம் காட்டுகிறது. அரசியலமைப்புச் சீர்திருத்தத்தை அரங்கேற்றுவதற்காக தமிழரசுக் கட்சி ஐக்கிய தேசியக் கட்சி அரசை ஆதரிக்கிறது என்றால், புதிய அரசியலமைப்புச் சீர்திருத்தமும் அரங்கேறப் போவதில்லை என்பது நிரூபணமாயிற்று. அப்படியாயின் பிரதமர் ரணிலின் அரசை ஆதரிப்பது எதற்கானது என்பது தான் புரியாமல் உள்ளது. எங்கும் ஏமாற்றம், எதிலும் ஏமாற்றம் என்பதோடு யுத்த இழப்புக்கள் தந்த வடுக்களைச் சுமந்து கொண்டிருக்கும் எங்கள் தமிழினம் வாழவேண்டுமாயின் முதலில் எம் அரசியலில் மாற்றமும் மறு மலர்ச்சியும் ஏற்படவேண்டும்.

இதை ஏற்படுத்தக் கூடிய சொல்லாண்மையும் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக நியாயத்தை தக்கவாறு உரைக்கவல்ல பெருந்தகைமையும் துறவு நிலைத் துணிவும் தங்களிடமே உண்டு. 
எனவே கம்பன் கழகம் அமைத்து கன்னித் தமிழ் வளர்க்கும் தாங்கள், தமிழினத்திற்கு சரியான 
அரசியல் தலைமை தேவை என்பதை தமிழ்மக்களுக்கு எடுத்துரைக்கின்ற பெரும்பணியை அறப் பணியாகச் செய்யவேண்டும் என்பது தான் நம் தாழ்மையான கோரிக்கை. இங்கு தமிழரசுக் கட்சியிலும் ஆற்றல்மிகு அரசியல்வாதிகள் உளர். அவர்களையும் இணைத்துத் தமிழ்மக்களுக்கான புதிய அரசியலை நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களின் தலைமையில் உருவாக்குவோம்.

இங்கு எந்த அரசியல்வாதிகள் மீதும் எமக்கு எந்தக் காழ்ப்புணர்வும் கிடையாது என்பதைச் 
சத்தியப்படுத்துகின்றோம். எனவே மீண்டும் தங்களிடம் கேட்டுக்கொள்வது பொய்மையாளர்களை விடுத்து மெய்மையாளர்களை ஒன்று படுத்தி, ஒற்றுமைப்படுத்தி தர்மத்தின் வழியில் தமிழ் மக்களுக்கான அரசியலை அமைப்போம்.அது நிச்சயம் இறைபலத்துடன் எம் இனத்திற்கு விடிவைத்தரும். இது சத்தியம்.
நன்றி

✿ ✿ ✿ ✿ ✿ ✿
மேலே பதிவேற்றப்பட்டுள்ள  'புருசோத்தமன் எழுதும் கம்பவாரிதிக்கு ஓர் அன்பு மடல்' என்ற தொடர் மடலின் பத்துப் பாகங்களும், யாழ்ப்பாணம் - இலங்கையிலிருந்து வெளிவருகின்ற நாளிதழ் வலம்புரியில், 27.03 - 09.04 / 2019 என்ற திகதிகளுக்கிடையில் வெளியிடப்பட்டவை என்பதைத் தங்களுக்கு அறியத்தருகின்றோம்.

நன்றி.
-உகரத்தினர்-

Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...