•                                                 உகரத்தில் வெளியாகும் எழுத்தாக்கங்களுக்கு அவ்வவற்றின் ஆசிரியர்களே பொறுப்பாளிகளாவர்..!

Monday, April 22, 2019

இது, உயிர்த்த ஞாயிறு இல்லை! -ஸ்ரீ. பிரசாந்தன்-பாரிசில் பற்றியெரிந்த தேவாலயத்தின்
தீக் கங்குகள் நம்
முற்றத்தில் வீழ்ந்தன.
பாதுகாக்கப்பட்டது முட்கிரீடம்.

ஆனால் பறிபோய்விட்டன
மேய்ப்பனின் மந்தைகள்.
தொழுது மண்டியிட்டுக்
குனிந்தவர் நிமிரவில்லை.
ஓலமிட்ட குரல், கோலமிட்ட குருதி.
தாயின் செட்டைக்குள்ளாக
குஞ்சுகளைப் பருந்து குதற,
கசியும் விழிகளுடன்
மன்றாடுவன், பிதாவே!
இன்னுமொரு முறை அறையப்பட்டீர்,
தெறித்த குருதித் துளிகள், ஆணிகளாக.
இது, நீர்
உயிர்த்த ஞாயிறு இல்லை.
மானுடம் மரித்த ஞாயிறு,
ஆமென்.

             - ஸ்ரீ. பிரசாந்தன்-

Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...