'ஆகமம் அறிவோம்-பகுதி 8: அபரக்கிரியைகள்' -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

ங்களில் பலர்,
ஆகமம் அறிவோம் கட்டுரைத் தொடருக்குத் தருகின்ற ஆதரவு,
மனமகிழ்வைத் தருகிறது.
வேறுசிலர் நாத்திகக் கருத்துக்களையும்,
பிராமண எதிர்ப்பையும் மனதில் வைத்துத் தம் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
அவர்களுக்காய் ஒன்று சொல்ல விரும்புகிறேன்.
நம்பிக்கை என்பது அவரவர் சுதந்திரத்தைப் பொறுத்தது.
ஒருவர் நம்பிக்கையில் தலையிட இன்னொருவர்க்கு அதிகாரம் இல்லை.
நமது வேத, ஆகமக் கருத்துக்களை உள்வாங்கும் முயற்சியில்,
பிராமண எதிர்ப்புக் கருத்துக்களைப் புகுத்தி,
அவற்றை நிராகரிக்கும்படி கூறுவது நியாயமற்ற செயலாம்.
🍁 🍁 🍁 🍁
இதற்கிடையில் மொழிப் பற்றாளர்களின் எதிர்ப்பு ஒருபுறம்.
அவர்க்காகவும் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன்.
நாம் தமிழ்வேதமாகக் கருதும் திருமுறை நூல்களில் வரும் பாடல்கள்,
வேதங்களையும் அந்தணர்களையும் பற்பல இடங்களில் போற்றி நிற்கின்றன.
பிற்காலத்தில் நிகழ்ந்த சிலஅந்தணர்களின் சுயநலச் செய்கைகளை வைத்து,
அக்குலத்தார் அனைவரையும் விமர்ச்சித்தல் தவறென்பது எனது கருத்து.
சுயநலமிக்க அந்தணர்களை எதிர்க்கவெனப் புறப்பட்ட,
பல அமைப்புக்களைச் சார்ந்தோரின் நடவடிக்கைகள்,
முன்னை அந்தணர்களின் செயல்களைவிட,
கடும் மோசமாய் அமைந்திருப்பது வெளிப்படை.
தவறிழைக்கும் அவ் ஓரிருவரை வைத்து,
அவர்தம் இனத்தை இழிவு செய்தல் எத்தனை தவறோ,
அதே போன்றதே ஒரு சில அந்தணரின் செயலுக்காய்,
அவர்தம் குலத்தையே இழிவு செய்வதுமாம்.
🍁 🍁 🍁 🍁
நம் இனமும் மொழியும் உயர அருட்கொடைகள் பல செய்த,
அன்றைய பரிமேழலகர் தொடக்கம் இன்றைய பாரதி வரை,
நாம் தொழுதும்  நிற்கும் பெரியோர் பலராவர்.
பொதுவான அந்தண எதிர்ப்பில் இப்பெரியோர்களையும் இழிவு செய்வதில்,
எனக்குக் கிஞ்சித்தும் உடன்பாடில்லை.
எனவே இத்தகையோர் கருத்தைப் புறந்தள்ளி,
இனி என் கருத்துக்களைத் தொடர்ந்து பதிவு செய்கிறேன்.
🍁 🍁 🍁 🍁
ஆகமங்கள் ஆலய வழிபாடு பற்றி மட்டுமல்லாமல்,
நமது அன்றாட வாழ்வு சம்பந்தப்பட்ட கிரியைகள் பற்றியும் கூறுகின்றன.
அந்த வகையில், கிரியைகளில் இன்றும் நாம் ஓரளவேனும்  கடைப்பிடித்து வரும்,
அந்தியேஷ்டிக்கிரியைகள் பற்றி ஆகமங்கள் கூறும் விடயங்களை,
இனி வரும் சிலவாரங்களுக்குத் தொகுத்துத் தரலாம் என நினைக்கிறேன்.
🍁 🍁 🍁 🍁
மேற்படிக் கிரியைகளில் ஊர்வழக்குச் சம்பிரதாயங்களும் கலந்து விட்டதால்,
நமது ஆகமங்கள் கூறும் அந்தியேஷ்டிக்கிரியைகள் எவை என்பது பற்றியும்,
ஊர்வழக்கால் வந்த கிரியைகள் எவை என்பது பற்றியும்,
நாம் தெளிவுற பிரித்தறிதல் அவசியமாகிறது.
🍁 🍁 🍁 🍁
உத்தரகாமிக ஆகமத்தின்,
27 ஆவது, 28 ஆவது, 29 ஆவது படலங்களில்,
மேற்படி அந்தியேஷ்டிக் கிரியைகள் பற்றிய விபரங்கள்,
விரிவாய்ச் சொல்லப்படுகின்றன.
ஆகமக் கருத்துக்களை உள்வாங்கி அகோர சிவாச்சாரியார் செய்த,
'அகோர சிவாச்சாரியார் பத்ததி' முதலிய நூல்களிலும்,
மேற்படி கிரியைகள் பற்றி விரிவாய்ச் சொல்லப்பட்டுள்ளது.
🍁 🍁 🍁 🍁
ஆகம அறிவு நிறையப் பெற்றிருந்த,
நம் நாட்டில் வாழ்ந்த சிவாகமபானு சிவஸ்ரீ ச.குமாரசாமிக் குருக்கள் அவர்கள்,
மேற்படி விடயங்களைத் தொகுத்து,
'சிரார்த்த தீபிகை' எனும் நூலை வெளியிட்டுள்ளார்.
ஆனாலும் மேற்படி நூல்களிலுள்ள விடயங்கள் இன்றைய நிலையில்,
சாதாரணர்களுக்கு முழுமையாய் விளங்கும் தன்மையோடு எழுதப்படவில்லை.
அதனால் இக்கிரியைகளை நம் மக்கள் ஆகம நெறி அறிந்து பின்பற்றுவதற்காக,
மேற்சொன்ன நூல்கள் அந்தியேஷ்டிக் கிரியைகள் பற்றிச் சொல்லும் விடயங்களை,
படிப்போர்தம் கவனத்தில் பதியச் செய்ய என்னால் முடிந்த அளவு முயல்கிறேன்.
🍁 🍁 🍁 🍁
அதற்கு முன்பாக சில சொல்லவேண்டியிருக்கிறது.
சிரார்த்தம் பற்றிய முழுவிபரங்களையும்,
நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக,
இப்பகுதியைச் சற்று விரிவாய் எழுதும் தேவையிருக்கிறது.
அவற்றுள் ஒருசில பகுதிகள் கற்போர்க்குச் சோர்வினைத் தரலாம்.
அங்ஙனம் சோர்வு வருமிடத்து,
உங்களுக்குத் தேவையற்றவையெனக் கருதும் பகுதிகளை,
நீங்கள் கடந்து செல்லலாம் என பணிவோடு அறிவிக்கிறேன்.
🍁 🍁 🍁 🍁
(தொடரும்)

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்