வினாக்களம் - 42 | கம்பவாரிதி பதில்கள்

வினாக்களம் - 42 | கம்பவாரிதி பதில்கள்
 
வாசகர் கேள்விகளுக்கு கம்பவாரிதி பதிலளித்துவரும் "வினாக்களம்" கேள்வி-பதில் தொடரின் 42 ஆவது பகுதியில் சுவாரசியமான கேள்வி பதில்களுடன் இன்று சந்திக்கிறோம்.
 
 
நீங்களும் உங்கள் கேள்விகளை "Kambavarithy Ilankai Jeyaraj" எனும் முகப்புத்தக பக்கத்தினூடாகவோ அல்லது kambanlanka@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பி வைக்கலாம். உங்கள் கேள்விகளும் அதற்குரிய கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் அவர்களின் பதில்களும் தொடர்ந்து உகரம் இணையத்தளத்தில் பிரசுரமாகும்.
 
 
 
 
 
 
 
 
 
கேள்வி 01: 
விதுர்ஷன்:   முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல் செய்வது பற்றி இத்தனை பேர் மாய்ந்து மாய்ந்து போராடுகிறார்களே! 
 
 
 
 
கம்பவாரிதி பதில்:
    மண்ணுக்காக சில பேர் மாய்ந்தார்கள். கொண்டாட்டங்களுக்காக சிலபேர் மாய்கிறார்கள். எல்லாம் காலத்தின் கோலம். 
 
கூத்தாடியின் கொமென்ட்ஸ்: கொண்டாட்டங்களுக்காகவல்ல.. பதவிகளுக்காக..!
 

 
கேள்வி 02: 
கந்தையா ரகு: அரசிலிருந்து விலகுவது பற்றி சுதந்திரக்கட்சி இறுதி முடிவு எடுக்கப்போகிறதாமே?  
 
 
 
 
கம்பவாரிதி பதில்:
          எத்தனையாவது இறுதி முடிவாம்? 
 
கூத்தாடியின் கொமென்ட்ஸ்: சம்பந்தரின் இந்த வருசம் தீர்வு எண்டுறது போலத்தான்..
கேள்வி 03: 
தபேந்திரா:      முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பற்றி உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளுங்களேன்? 
 
 
 
 
 
கம்பவாரிதி பதில்:
      ஈழத்தமிழினத்தின் மாறாத வரலாற்றுச் சோகம். மனிதர்களை புழுக்களாய் நினைந்து வதைத்த மிருகங்கள். அல்லல்பட்டு ஆற்றாது அழுதவர்களின் கண்ணீர் கண்ணீரல்ல நெருப்பு. என்றோ ஒருநாள் அந்த அற நெருப்பால் பாவிகள் பொசுங்குவார்கள். இறந்த மனிதர்களை வைத்து வாழ நினைக்கும் பாவிகளும் தான்.. 
 
கூத்தாடியின் கொமென்ட்ஸ்: உண்மை அஞ்சலியில் கூத்தாடியும் இணைகிறேன்.
கேள்வி 04: 
சுகுமாரன் தாஸ்: மறம் உடனே வெற்றி பெறுகிறது. அறம் வெற்றி பெற தாமமாகிறது. இது ஏன்?
 
 
 
 
 
கம்பவாரிதி பதில்:
    மறத்தில் நம்பிக்கை வைப்பவனின் உறுதி அறத்தில் நம்பிக்கை வைப்பவர்களிடம் இல்லை. அறம் சற்றுப்பிந்தி வெற்றி பெறுவதும் நல்லதுதான். அப்போதுதான் மறத்தின் கொடுமையையும் அறத்தின் பெருமையையும் உலகம் அறியும். 
 
கூத்தாடியின் கொமென்ட்ஸ்:         எங்கள் தலைவர்கள் மறத்தின் கொடுமையைக் கண்டார்கள். அறத்தின் பெருமை தெரிந்ததா?
கேள்வி 05: 
ராமலிங்கம்:    திரும்பத் திரும்ப மாகாணசபையையும் முதலமைச்சரையும் தாக்கி வருகிறீர்களே. அப்படி என்னதான் கோபம் உங்களுக்கு?
 
 
 
 
 
கம்பவாரிதி பதில்:
     கீழே இருக்கும் பேட்டியை (வீடியோவை) பாருங்கள். என் கோபத்தின் நியாயம் புரியும்.
 
கூத்தாடியின் கொமென்ட்ஸ்:    உண்மையை உரத்து உரைக்க இன்னும் தமிழர்கள் இருக்கிறார்களா? இவ்விருவருக்கும் கூத்தாடியின் சல்யூட்?
கேள்வி 06: 
குணா வர்மன்: நினைவேந்தலை எதிர்த்து சில சிங்களத் தலைவர்கள் கொதிப்பதைப் பார்த்தீர்களா?
 
 
 
 
 
கம்பவாரிதி பதில்:
    கொதிக்காவிட்டால்த்தான் ஆச்சரியம். நன்றாக சிங்களம் தெரிந்தவர்கள் 'முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்" என்ற பழமொழியையும் 'அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்" என்ற இளங்கோவடிகளின் அடிகளையும் மொழிபெயர்த்து அவர்களுக்குச் சொன்னால் நல்லது.
 
கூத்தாடியின் கொமென்ட்ஸ்: அவர்களோடு உறவாயிருக்கும் முதலமைச்சர் இதைச் செய்யலாமே!

 
கேள்வி 07: 
ரவிஷாந்: சம்பந்தனின்  பாராட்டு நிகழ்வில் கூட்டமைப்பு உறுப்பினர்கள் யாரும் கலந்து கொள்ளாதது பற்றி எழுதியிருந்தீர்கள். அதுபற்றி அவர்களிடமிருந்து பதிலேதும் வரவில்லையே  அவ்வளவு அலட்சியமா?
 
 
 
 
 
கம்பவாரிதி பதில்:
     பதில் வந்தால்த்தான் ஆச்சரியம். அவர்கள் ஜனநாயகத் தலைவர்கள் அல்லர். முடியாட்சித் தலைவர்கள். காலந்தோறும் ஏமாளி மக்கள் தமக்கு வாக்களிப்பார்கள் எனும் நம்பிக்கை இருக்குமட்டும் அவர்கள் ஏன் மற்றவர்களுக்குப் பதில் சொல்லப்போகிறார்கள்.
 
கூத்தாடியின் கொமென்ட்ஸ்: மெத்தச்சரி!
 
கேள்வி 08: 
காந்தரூபன்: நினைவேந்தல் நிகழ்விலாவது எல்லாத் தமிழ்த்தலைவர்களும் ஒன்றாய்க் கலந்துகொள்ளலாமே. என்ன சொல்கிறீர்கள்?
 
 
 
 
 
கம்பவாரிதி பதில்:
     கலந்து கொண்டால்த்தான் ஆச்சரியம். செத்தவர்களை வித்துப்பிழைக்க நினைக்கும் இவர்களா ஒன்றுபடுவார்கள்? இன்னும் கலவரங்களும் அழிவுகளும் நிகழ்ந்தால்த்தானே அதைச் சொல்லிச்சொல்லி தம் சந்ததியினரையும் ஆட்சிப்பீடத்தில் ஏற்றலாம். தமிழர்களின் விடிவு இன்னும் தொலைதூரத்தில் தான் இருக்கிறது.
 
கூத்தாடியின் கொமென்ட்ஸ்: செத்தவர்களை வித்தவர்கள் ஆகா! நம் தலைவர்களுக்கு சரியான பட்டம்.

 
கேள்வி 09: 
தவனேஷ் தர்மபாலன்: மறைந்த எழுத்தாளர் பாலகுமாரன் பற்றி?
 
 
 
 
 
கம்பவாரிதி பதில்:
     நவீன எழுத்துக்களில் மரபிலக்கிய எழுத்துக்களின் வலிமையை ஏற்றியவர். புத்தி மறைப்பைக் கடந்து மனித இதயங்களின் அடிவரை சென்று அதிசயிக்க வைத்தவர். பேச முடியாத சிற்றின்ப நுட்பங்களை பேசியது போலவே பேரின்ப நுட்பங்களையும் உரைக்கும் திறன் பெற்றவர்.  அவரது 'யாதுமாகி நின்றாய்', 'பச்சை வயல் மனது' போன்ற ஆக்கங்களால் அதிர்ந்திருக்கிறேன். இந்த ஆண்டு எங்கள் கம்பன் விழாவில் 'கம்பன் புகழ்' விருதைப் பெறவிருந்தார். உடல் நலம் குன்றியது அறிந்து வருதல் கூடுமா? என நான் கேட்டபோது சாகித்திய அக்கடமி விருதுக்கு நிகராய் இதைக் கருதுகிறேன். கட்டாயம் வருவேன் என்றார். இறுதியில் அவரால் வரமுடியாமல் போயிற்று. இந்தப் பிறவியில் இறைவன் எனக்குத் தந்த வரங்களில் ஒன்றாய்த்தான் அவரது நட்பைக் கருதுகிறேன்.
 
கூத்தாடியின் கொமென்ட்ஸ்: எழுத்தில் அவர் பாலகுமாரன் அல்ல முதிர்ந்த குமாரன்.
 
***
Share:

Related Posts

Copyright © 2024 - உகரம் - All rights reserved.